Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 அக்டோபர், 2019

திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல... வள்ளுவர் கோட்டம்...!!

Image result for திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல... வள்ளுவர் கோட்டம்...!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாகும்.

சிறப்புகள் :
திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல, வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் காண்போர் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து உயர்ந்து நிற்பது சிற்பத் தேர். இந்த சிற்பத் தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது.
 ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு சக்கரங்கள் உள்ளது.
 3,500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை காணும் வண்ணம் பெரிய அரங்க மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்க மேடையின் நடுவே திருவள்ளுவரின் வண்ண ஓவியமும், இடது புறத்தில் சங்கப் புலவர்கள் அதங்கோட்டாசான் திருவுருவப்படமும், வலது புறத்தில் தொல்காப்பியர் திருவுருவப்படமும் அழகுக்கு அணி சேர்க்கின்றன.
 மேலும் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும்.

 மணிமாடத்திற்கு மேலே 220 அடி நீளம், 140 அடி அகலம் கொண்ட வேயாமாடம் அமைக்கப்பட்டுள்ளது.
 அதில் தேரின் கலயம், தேர்க்கூரை, கருவறையிலுள்ள திருவள்ளுவர் சிலை ஆகிய மூன்றின் நிழல் உருவங்கள் தெரியும் வண்ணம் இரண்டு பெரிய நீர் நிலைகளும், ஒரு சிறிய நீர் நிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
 திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டத்தின் மேல்தளத்தில் திருக்குறளின் மூன்று பால்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
 மேலும் கருவறை, கோபுரம், கலசம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் இத்தளத்திலிருந்து பார்க்கலாம். அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூஞ்செடிகளும், அழகூட்டும் மரங்களையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.

எப்படி செல்வது?

 சென்னைக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக