இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவகுரு அசுர குருவாக மாறுதல் :
அசுர குரு தலைநகரம் வருவதாக செய்தி அனுப்பினார்.
ஆனால், அவரால் அங்கு செல்ல முடியாத சூழலைப் பற்றி அசுரர்களுக்கு தகவல் அனுப்ப
தவறிவிட்டார். இந்த சிறிய தவறை தேவகுரு நன்றாக பயன்படுத்த எண்ணினார்.
எனவே ஜெயந்தி வரமாக வாங்கிய இந்த பத்தாண்டு
காலத்தில் அசுர குருவாக இருந்து, அசுரர்களுக்கு தேவர்களின் மீதுள்ள கோபத்தை மாற்றி
அமைக்கலாம் என நினைத்து தேவகுரு அசுர குருவாக மாறி தலைநகரம் சென்றார்.
தேவயானி பிறப்பு :
காலங்கள் கடக்க ஜெயந்தி ஒரு பெண் குழந்தையை
ஈன்றெடுத்தாள். அந்த பெண் குழந்தைக்கு தேவயானி என்று பெயர் சூட்டினர். அதேசமயம்
அசுரர்களின் தலைநகரத்தில் தேவகுரு அசுர குருவாக இருந்து தேவர்களின் பெருமைகளை
எடுத்துக்கூறி அவர்கள் மீதுள்ள கோபத்தை குறைத்து தேவர்களை வணங்கச் செய்து அதில்
வெற்றியும் அடைந்தார்.
சுக்கிராச்சாரியார் தலைநகரம் திரும்புதல் :
நாட்கள் கடந்து ஜெயந்தி வரமாக வாங்கிய
பத்தாண்டுகள் நிறைவுறும் இறுதி நாட்கள் வந்தன. எனவே தன் மகளை வளர்த்து உரிய
சம்பிரதாயங்கள் செய்து வைக்குமாறு கூறி தன் பதியான சுக்கிராச்சாரியாரையும், மகளான
தேவயானியையும் பிரிந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு தேவலோகம் சென்றாள் ஜெயந்தி.
ஏனெனில் தேவலோக சட்ட விதிமுறைகளின் படி
மானிடராகிய சுக்கிராச்சாரியாருக்கும், ஜெயந்திக்கும் பிறந்த மகளான தேவயானியுடன்
செல்ல முடியாது. அதனால் தான் ஜெயந்தி தன் பதியையும், மகளையும் பிரிந்து சென்றாள்.
ஜெயந்தி வரமாக வாங்கிய இந்த பத்தாண்டுகளில்
தேவகுரு அசுர குருவாக இருந்து அசுரர்களை மாற்றி அசுரர்களுக்கும், தேவர்களுக்கும்
இடையே போர்கள் ஏற்படாத வண்ணம் தடுத்து நிறுத்தினார்.
அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே போர்
இல்லாமல் அமைதியாக இருந்த காரணத்தால் கடமை தவறி இல்வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த தன்
மகளை தேவேந்திரன் கண்டிக்காமல் வரவேற்று நல்லாசி கூறினார்.
ஆனால், அசுரர்களின் தலைநகரத்திற்கு சென்ற
சுக்கிராச்சாரியருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காரணம் தன்னைப் போன்ற
ஒருவர் அசுரர்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறி வழி நடத்திக்கொண்டிருந்தது தான்.
அதைக்கண்ட அசுர குரு அவர் யார் என்பதை தன் ஞான
திருஷ்டியால் அறிந்து கொண்டு தேவகுருவின் மீது சினம் கொண்டார். பின் உண்மையான
குருவை நிரூபிக்க அசுர குரு ஆசிரமத்திற்கு சென்றார்.
விவாதம் முற்றுதல் :
இரண்டு அசுர குருவை ஒரே நேரத்தில் கண்ட
அசுரர்கள் குழம்பி போனார்கள். அச்சமயத்தில் உண்மையான குரு, போலியான குருவை நோக்கி
நீ யார் என்பதை யாம் அறிவோம், உண்மையான சுயரூபத்திற்கு வாரீர் என சினங்கொண்டு
கூறினார்.
யார் போலி என்று பதிலுக்கு அசுர குரு உருவத்தில்
இருந்த தேவகுருவும் கூற இருவருக்கும் வாக்குவாதங்கள் முற்றின. போலியான அசுர குரு
தன் மாணவர்களான அசுரர்களை நோக்கி யார் உண்மையான குரு, போலியான குரு என்று நீங்கள்
அறியவில்லையா? இத்தனை நாட்கள் உங்களுக்கு தேவையான அறிவுரை கூறி உங்களை வழி நடத்தி
வந்த அசுர குரு தெரியவில்லையா என போலியான குரு தன் கூற்றை கூறினார்.
சாபம் அளித்தல் :
போலியான குருவின் கூற்றை ஏற்று அசுரர்கள்
போலியான குருவை பணிந்து நின்றனர். இதைக்கண்ட அசுர குரு உங்களின் நலனுக்காக பல
காலம் தவம் இருந்து சஞ்சீவினி மந்திரத்தை சிவபெருமானிடமிருந்து கற்று வந்தேன்.
ஆனால், நீங்கள் தேவகுருவின் மாயையில் மயங்கி அறிவை இழந்து உள்ளீர்கள். தேவர்களை
வணங்கி நிற்கும் அளவிற்கு உங்களின் எண்ணங்களை மாற்றி உள்ளார் தேவகுரு. இனி வரும்
காலங்களில் யாரும் உங்களை காப்பாற்ற இயலாது. இனி தேவர்களிடம் தோல்வி அடைவீர்கள் என
சாபமிட்டார்.
தேவகுரு மாயமாதல் :
அசுர குரு அசுரர்களுக்கு சாபம் அளித்ததைக் கண்ட
தேவகுரு, தான் வந்த காரியம் சிறப்பாக முடிந்தது என எண்ணி தன் ஆசிரமத்திற்கு
சென்றார்.
தேவகுரு தான் இத்தனை நாட்களாக அசுர குருவாக
இருந்து வழிநடத்தினார் என்பதை அறிந்த அசுரர்கள் யார் தன் நிஜமான குரு என
கண்டறிந்தனர். பின், தங்கள் தவறை மன்னிக்க உண்மையான அசுர குருவிடம் பணிந்து
நின்றனர்.
அசுர குரு அசுரர்களின் உண்மையான நிலையை அறிந்து,
இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை. தேவகுருவின் மாயத்தால் நீங்கள் அப்படி
செய்தீர்கள் என நான் அறிவேன். மேலும், நான் தலைநகரம் வருகிறேன் என்று செய்தி
அனுப்பிவிட்டு வராமல் இருந்தது என் தவறு தான் என்று கூறி நீங்கள் இழைத்த இந்த
தவறுகளை நான் மன்னித்து விட்டேன் என்றார். மேலும், நான் அளித்த சாபத்தின் பலம்
நாட்கள் கடக்க கடக்க குறையும் என்றார்.
அசுரர்களின் கைகள் ஓங்குதல் :
இனிமேல் யாரும் தேவர்களை வணங்க வேண்டாம். இனி
என் சொல்படி கேளுங்கள் என சமாதானம் செய்தார் அசுர குரு. மேலும், இனி நம்
குலத்தவர்களின் இறப்பு குறையும் எனவும், இனி நீங்கள் போரில் தைரியமாக போரிடலாம்
என்றும் கூறினார். பிறகு அசுரர்களும் மன நிறைவுடன் போரில் ஈடுபட்டனர். போரில்
இறந்த அசுரர்களை தன் சஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச் செய்தார் அசுர குரு.
சுக்கிராச்சாரியார் தவம் செய்ய சென்றபோது தன்
பெற்றோர்களிடம் அசுரர்களுக்கு தேவையான அடைக்கலம் தந்து அவர்களை பேணிக்காக்க
சொல்லிவிட்டு சென்றார். இவரின் கூற்றுக்கு இணங்கி அவரது பெற்றோர்களும்
அசுரர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஒரு நாள் பிருகு மகரிஷி ஒரு பணிக்காக வெளியே
சென்றிருந்தார். அச்சமயம் அங்கு வந்த தேவர்கள் அசுரர்களை கொடுமைப்படுத்தினார்கள்.
இதைக்கண்ட கியாதி அசுரர்களை தேவர்களுக்கு தெரியாமல் மறைத்துக் காப்பாற்றினாள்.
இதையறிந்த தேவேந்திரன் நாராயணனிடம் முறையிட
அவரும் தன் சக்ராயுதத்தால் கியாதியின் தலையைக் கொய்துவிட்டார். தேவர்களும் அடைக்கலமாய்
இருந்த அசுரர்களை கொன்றனர்.
பிருகு மகரிஷியிடம் சாபம் பெறல் :
வெளியே சென்ற மகரிஷி தன் ஆசிரமத்திற்கு வந்தபோது
தன் பத்தினியின் நிலையைக் கண்டு அதிர்ந்தார். தன் பத்தினியின் இந்த அகோர நிலைக்கு
யார் காரணம் என்பதை அறிந்த மகரிஷி இதற்கு காரணமான நாராயணனை இந்த பூவுலகில்
மானிடனாய் பிறந்து துன்பம் அனுபவிக்கட்டும் என சாபம் இட்டார். பின் தன் தவ
வலிமையால் தன் பத்தினியை உயிர் பெறச் செய்தார்.
இதனை அறிந்த சுக்கிராச்சாரியார்
அசுரர்களை தேவர்களுக்கு எதிராக போராடும் படி தூண்டினார். மேலும் போரில் இறக்கும்
அசுரர்களை தன் சஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச் செய்தார். இதனால் தேவர்கள் பல
இன்னல்களுக்கு ஆளானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக