இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜோதிட ரீதியாக 12 ராசிகளில் சில ராசிகளை நெருப்பு ராசி என்றும், சில ராசிகளை நீர் ராசி என்றும், சில ராசிகளை நில ராசி என்றும், சில ராசிகளை காற்று ராசி என்றும் அழைப்பதுண்டு. அந்த வகையில் உங்கள் ராசி எந்த வகையை சேர்ந்தது. அதற்கான குணம் என்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நெருப்பு ராசிகள் :
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளையும் 'நெருப்பு ராசிகள்" என்று அழைப்பார்கள்.
குணங்கள் :
இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள்.
நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும், தலைமைப் பதவிகளை வகிப்பவராகவும் இருப்பார்கள்.
நில ராசிகள் :
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் 'நில ராசிகள்" என்று அழைப்பார்கள்.
குணங்கள் :
இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.
நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனதுடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாகவும் இருப்பார்கள்.
காற்று ராசிகள் :
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளையும் 'காற்று ராசிகள்" என்று அழைப்பார்கள்.
குணங்கள் :
இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்துக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன், உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
நீர் ராசிகள் :
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளையும் 'நீர் ராசிகள்" என்று அழைக்கிறார்கள்.
குணங்கள் :
இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக