Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

திருமாலை தேடிச் சென்ற ஹிரண்யாக்ஷன் !!

 Image result for திருமாலை தேடிச் சென்ற ஹிரண்யாக்ஷன் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நரகாசுரன் இனி என்னை யாராலும் வெல்ல முடியாது... மமதையில் ஹிரண்யாக்ஷன்..!!
மானிட பிறப்பெடுக்கும் திருமாலுக்கு உதவும் வகையில் அனைத்து தேவர்களும் அவர் பிறப்பெடுக்கும் யது குலத்தில் அவதரிக்க தொடங்கினார்கள்.
யது குலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரர் வசுதேவர் ஆவார். வசுதேவர் வாலிப பருவத்தை அடைந்ததும் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். எனவே, தேவகர் என்பவரின் மகளான தேவகியை பெண் பார்த்து நிச்சயம் செய்து வசுதேவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
பிரம்ம தேவரிடம் இருந்து வரத்தைப் பெற்ற ஹிரண்யாக்ஷன் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற மமதையில் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்த தொடங்கினான். பின்பு மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணினான். அதுமட்டுமின்றி தன்னை வெற்றி கொள்ள எவரும் இல்லை என்ற எண்ணமும், தானே ஆளப்பிறந்தவன் என்ற எண்ணமும் அவனிடம் மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கின.
பின்பு, அவன் முதலில் சத்தியலோகம் சென்று தனக்கு வரமளித்த பிரம்ம தேவரை வெற்றிக்கொள்ள ஆயத்தமானான். அவன் வருகையை உணர்ந்த பிரம்ம தேவரும் அவனிடம் போர் புரியாமல் சில சாதகமான வார்த்தைகள் மூலம் சமாதானப்படுத்தி உலகைக் காப்பவரான திருமாலை நீ வென்றால் உனக்கு நிகர் எவரும் இல்லை என்று கூறி திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தை நோக்கி ஹிரண்யாக்ஷனை அனுப்பி வைத்தார்.
வைகுண்டத்தை அடைந்த ஹிரண்யாக்ஷன் திருமால் வீற்றிருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு காவல் பணியில் இருந்த துவாரபாலகர்கள் எவ்விதமான தடையையும் ஏற்படுத்தாமல் அவனை உள்ளே அனுப்பினார்கள்.
அங்கு சென்றதும் திருமால் ஸ்வரூபியாகக் காணப்பட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திருமாலை தேடிச் செல்ல முயன்றான் ஹிரண்யாக்ஷன்.
போஜ குல மக்களின் அரசனாக இருந்தவர் உக்கிரசேனன் ஆவார். இவர் தேவகரின் அண்ணன். உக்கிரசேனனுக்கு கம்சன் என்று ஒரு மகன் இருந்தார். கம்சன் தனது சித்தப்பாவான தேவகரின் மகளான தேவகியை வசுதேவருக்கு பெரியவர்கள் சூழ தன் தலைமையில் மணம் முடித்து வைத்தார்.
பின்பு தனது சகோதரியான தேவகியையும், தனது சகோதரியின் கணவனான வசுதேவரையும், அழகிய மலர்களை கொண்டு அலங்கார வேலைப்பாடு நிறைந்த குதிரை தேரில் அமரவைத்து தான் சாரதியாக இருந்து, தனது தங்கையின் கணவரின்(வசுதேவரின்) அரசாட்சி பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் எங்கு சென்று கொண்டிருக்கிறாய் கம்சனே! என ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

தொடரும்..








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக