Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

சூரசம்ஹாரம் - பகுதி 02..!!

 Image result for சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி ஸ்பெஷல் : தந்தையின் மந்திரச் சொல்... தாயின் சதி திட்டம்... வெல்லப்போவது எது?...

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சுக்கிராச்சாரியாரின் திட்டம் என்பது காசிபரை, மாயா மயக்கி அவரின் மூலம் மிகச்சிறந்த வலிமை மிகுந்த அசுர வீரர்கள் பலரை உருவாக்க வேண்டும் என்பதாகும். மாயா தனது மாய சக்திகளால் ஒரு புதிய மாளிகைகளையும், எழில் மிகுந்த நந்தவனத்தையும் காசிபர் இருந்த கானகத்தில் எழுப்பினாள். பின்பு காசிபரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தாள். அவள் எதிர்பார்த்தப்படியே காசிபரும் அங்கு வந்தார். பின்பு, மாயா தான் கற்ற மாய சக்திகளால் காசிபரை மயக்கினாள். இதனால் காசிபர் தான் பெற்ற தவவலிமை எல்லாவற்றையும் இழந்தார்.
காசிபரும், மாயாவும் முதலாம் பொழுதில் மானுட உருவத்தில் இணைந்ததால் மானுட தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் பொழுதில் சிங்க உருவில் இருவரும் இணைந்ததால் சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் பொழுதில் யானை உருவில் இணைந்ததால் யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் பொழுதில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்ததால் ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். இவர்களின் இணைவின்போது வெளிப்பட்ட வியர்வை மூலம் ஆயிரக்கணக்கான அசுர வீரர்கள் உருவாகினர்.
அதன் பின் காலங்கள் வெகுவாக கடந்தன. காசிபரின் புத்திரர்கள் இளம் வயதை எட்டினர். ஒரு சமயம் புத்திரர்கள் அனைவரும் தங்களது தந்தையையும், தாயையும் வணங்கி நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று வேண்டி நின்றனர். அவ்வேளையில் தந்தையான காசிபர் தர்ம வழிமுறைகளை பின்பற்றி வாழ வேண்டும் என்றும் ஈசன் ஒருவர் மட்டுமே அழிவில்லாதவர். அவரை எண்ணி நாம் வாழ்ந்து இந்த பிறவி பெருங்கடலை கடக்க வேண்டும் என்றும், தனது புத்திரர்களுக்கு ஆலோசனை கூறினார். பின்பு தனது தவ பணியை தொடர அவர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.
ஆனால், அவர்களின் தாயான மாயாவோ தவ வாழ்க்கையிலும், ஆன்மீகத்திலும் விருப்பமில்லாமல் இவ்வுலகில் தோன்றிய நாம் சுகபோகங்களுடன் எல்லா லோகங்களிலும் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தந்தையைக் காட்டிலும் தாய் சொல்லை பிள்ளைகள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினாள். பின்பு நீங்கள் அனைவரும் அசுரலோகம் சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரை சந்தித்து அவரிடம் ஆசிப்பெற்று ஆலோசனை கேட்டு அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார். தாயின் முடிவை கேட்ட பின் அனைவரும் விரைவாக பாதாள லோகத்தில் உள்ள சுக்கிராச்சாரியாரை காண விரைந்து சென்றனர்.

தொடரும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக