இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒவ்வொரு மதத்துக்கும் வழிபாட்டு முறை என்பது மாறும். அதிலும்
இந்து மதத்தில் உள்ள வழிபாட்டு முறைகள் மற்ற எல்லா வழிபாட்டு முறைகளையும் விட வித்தியாசமானதும்
ஆழமானதும் கூட. அப்படி பாரம்பரியம் மிக்க விஷயம் தான் சாமிக்கு தேங்காய் உடைப்பது.
அது எப்படி வந்தது. அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன என்பது பற்றி
இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.
தேங்காய் ஒரு மங்களகரமான பழம்:
தேங்காயின் பல பெயர்கள்
தேங்காயின் வரலாறு:
வட இந்தியாவில்...
தேங்காயைப் பூஜைக்கு ஏன் பயன்படுத்துகிறார்கள்?
எப்படிப் பயன்படுத்துகின்றனர்?
தேங்காய் பிரசாதம்:
தேங்காயை
இரண்டாக உடைத்து அதைக் கடவுள் முன் வைத்து பூஜை செய்து பிரசாதமாகப் பக்தர்களுக்கு
வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு செய்தால் நினைத்த காரியம் நடக்கும்
என்றும் நம்புகின்றனர். மேலும் கடவுளுக்குத் தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி
இருந்தால் கெட்டது நடக்கும் என்று சிலர் நம்புகின்றனர். இதைத் தென்னிந்தியாவின்
பலரும் செய்து வருகின்றனர். தென்னை மரம், வேப்பமரத்தைப் போன்றே புனிதமாகக்
கருதப்படுகிறது மேலும் தென்னை மரத்தை ஏதேனும் செய்தால் அதைச் செய்தவர்களுக்கு
தீங்கு நடக்கும் என்றும் பலரும் நம்புகின்றனர். பட்டுப்போன தென்னை மரம்
வீட்டிலிருந்தால் வீட்டிற்கு ஆகாது என்று உடனடியாக அதை அப்புறப்படுத்தி விடுவார்.
தேங்காயை
உடைத்து கடவுள் முன்னால் வைத்து பூஜை செய்வதற்குப் பின்னால் ஒரு பயங்கரமான வரலாறு
உள்ளது. அதாவது பழம்பெரும் காலங்களில் உயிர் பலியிட்டு உயிர்களின் தலையைக் கடவுளுக்குக்
காணிக்கையாக அளித்து வந்தனர். பின்னர் அதன் பின்னால் உள்ள பாவத்தை அறிந்து கொண்டு
உயிருக்குப் பதில் தேங்காயை மாற்றி விட்டனர்.
தேங்காய் எதனால் தேர்ந்தெடுக்கப்பட்டது?
அது
எல்லாம் சரி. தேங்காய் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் மனிதனின்
தலையை வெட்டி கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வந்தது ஏற்கனவே நாம்
குறிப்பிட்டிருக்கிறோம். பின்பு அதன் பாவத்தை புரிந்ததினால் மனிதனின் தலை போலவே
உள்ள தேங்காயைத் தேர்ந்தெடுத்ததாகப் பழங்கால வரலாறுகள் குறிப்பிடுகின்றது. பின்பு
இந்த வழிபாடு வேகவேகமாக அனைவரிடமும் பரவியது. இந்து புராணத் தத்துவப்படி மனிதனின்
மும்மலங்களான ஆணவம், கண்மம், மாயை என்னும் மூன்றையும் அழிக்கிற மூன்று கண் உள்ள
பொருள்.
ஹிந்து புராணங்களில் தேங்காய்:
தேங்காய்
உடைப்பதன் பின்னால் ஒரு சிறிய காரணம் உள்ளது. அதாவது தேங்காய் உடைப்பது போல, நமது
கெட்ட குணங்கள், பொறாமைகள், போட்டிகள், பயங்கள், பக்தி இன்மை போன்ற விஷயங்களும்
அதோடு சேர்ந்து உடைந்து போகட்டும் என்ற ஒரு நம்பிக்கையில் தேங்காயை உடைப்பதை
வழக்கமாக முன்னாளில் செய்து வந்துள்ளனர்.
இந்து
புராணங்களின்படி தேங்காய் விஸ்வாமித்திரர் என்பவரால் உருவாக்கப் பட்டதாகக்
குறிப்பிடப் பெறுகிறது. சூரிய வம்சத்தை ஆண்ட மிகப்பெரும் அரசரான சத்திய வரதர்
சொர்க்கத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தேங்காயை
வைத்து அவருக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த முயற்சி செய்தார் விஸ்வாமித்திரர். ஆனால்
கடவுள்கள் அந்த தேங்காயை எறிந்து விட்டனர். அரசர் சத்தியவரதருக்குச் சொர்க்க லோகம்
செல்ல வேண்டும் என்பதே தன் வாழ்நாள் லட்சியமும் கனவுமாக இருந்தது. கடவுள் பக்தி
மிகுந்த அரசராகத் திகழ்ந்தார் சத்தியவரதர்.
தேங்காயின் வேறுபல பயன்கள்:
தேங்காயின்
உள் பகுதியை போல வெளிப்பகுதி பெருமளவில் பயன்படுகிறது. தேங்காவின் வெளிபகுதியைக்
கயிறு செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர் மேலும் கால்மிதி வீட்டிலுள்ள
பர்னிச்சர்கள் உள்ள குசன்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.தேங்காயின்
உள்பகுதியைப் பச்சையாகச் சாப்பிடவும் அல்லது சமைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பது
நாம் அறிந்ததே. மேலும் அதைச் சோப்பு தயாரிப்பதற்கும் அதை அரைத்து எண்ணெய்
தயாரிக்கவும் பயன் படுத்துகிறார்கள். சமையல் எண்ணெய் மட்டுமல்லாமல் நறுமண
எண்ணையும் தேங்காய் வைத்து தயார் செய்கின்றனர். தேங்காயெண்ணெய் இளம் வயதில் நரை
வராமல் இருக்க உதவுகிறது.
தென்னை
மரத்தின் வேரானது கடல் மற்றும் அருகே உள்ள உப்புத் தண்ணீரை உறிந்து அதைச் சுத்தமான
நீராக மாற்றி மரத்திற்கு அனுப்புகிறது. தேங்காயிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர்
இனிப்பாகக் கிடைக்கிறது. தேங்காய் தண்ணீர் பல மருத்துவ நன்மைகள் கொண்டது என்று
குறிப்பிடுகின்றனர்.
தேங்காய் தண்ணீரின் மருத்துவ குணங்கள்:
தேங்காய் தண்ணீர் தாகத்தை
போக்குவதற்கு மட்டும் உபயோகப்படுத்தபடுவதில்லை. உடலிலுள்ள பல கெடுதல்களைப் போக்க
வல்லது. குறிப்பாகச் சிறுநீர் இதனால் ஏற்படும் பிரச்சனை மேலும் கிட்னி
சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தேங்காய் தண்ணீர் பெரிதும் உதவுகிறது. கிட்னியில்
உள்ள கற்களுக்குத் தேங்காய் தண்ணீர் ஒரு மருந்தாகச் செயல்படுகிறது.மருத்துவர்கள்
மருந்துகளோடு சேர்த்து தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் கிட்னி கற்கள்
சீக்கிரம் கரைந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக