இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூந்தலின் உறுதி வளர்ச்சி தன்மை வலுவாக இருக்கவேண்டும் என்று
பராமரிப்பவர்கள் தலைக்கு சில அடிப்படை தவறுகளை செய்துவிடுகிறார்கள். இதனால் பராமரிப்பு
பலன் அளிக்காமல் போகிறது.
தலை குளியல்
ஆண்கள் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளி லும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். இன்று பெரும்பாலும் தினமு மே தலைக்கு குளிக்கிறோம். ஆனாலும் முடி உதிர்வு பிரச்சனை கட்டுக்கடங்காமல் தான் இருக்கி றது.
ஷாம்புவுக்கு முன்
கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூற்றுப்படி இயற்கை கண்டிஷனர்களையே கூந்தல் பொலிவுக்கும் பளபளப்புக்கும் பயன்படுத்தலாம். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு முன்பு பழங்கால முறைப் படி சுத்தமான தேங்காயெண்ணெயை தலையில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்ய வேண்டும். பிற கு பத்து நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இது நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வழி.
அவர்கள் எண்ணெய் குளியல் இல்லாத தினத்தில் உச்சந் தலையில் இலேசாக எண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பார்கள். இவற்றைக் கடைப்பிடிப்பதுதான் கூந்தலின் வலுவுக்கு சிறந்த வழி என்கி றார்கள் தற்போதைய கூந்தல் நிபுணர்கள்.
கூந்தலுக்கு கண்டிஷனர்
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏதேனும் ஒன்றை பயன் படு த்தி அதையே கண்டிஷராக்கி தலையில் முதலில் தேய்க்கலாம். எண்ணெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கற்றாழை மடலை வெட்டி அதிலிருக்கும் ஜெல்லை தலையில் தேய்த்து ஊறவைக்க லாம். இயற்கை அளிக்கும் சிறந்த கண்டிஷனர் இது என்றே சொல்லலாம். இதற்கு பிறகு இருபது நிமி டங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம்.
தலைக்கு குளிப்பதற்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வேர்க்கால்களுக்கு உயிரூட்டம் கொடுப்பதால் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும். பளபளப்பு வேகமாக கூடும். ஒரு முறை இப்படி குளித்த உட னேயே கூந்தலின் மினுமினுப்பை நீங்களே உணரமுடியும்.
எப்படி வரும் பளபளப்பு
தலைக்கு குளிப்பதற்கு முன்பு கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்க செய்யப்படும் இந்த எண்ணெய், கற்றாழைச்சாறு மசாஜ் எல்லாமே கூந்தலை வறட்சியிலிருந்து மீட்டு தலைக்கு குளித்த பிறகும் கூந்தலுக்கு பளபளப்பு கொடுக்கும். பொலிவு குறையாமல் காக்கும்.
எப்போதும் கடைபிடிக்கலாமா
சைனஸ் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் உச்சந்தலையில் எண்ணெய் வைப்பதை பழக்கப் படுத்திகொள்ள கூடாது. இத்தகையோர் தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே மருத்துவர் கள் ஊக்குவிப்பதில்லை. அதனால் வறண்ட கூந்தல் இருந்தாலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை எடுத்துகொள்வது நல்லது. ஆனால் அதே நேரம் இவர்கள் இயற்கை யாகவே கண்டிஷனராக செயல்படும் கற்றாழையைத் தடவலாம்.
உடல் குளிர்ச்சி கொண்டிருப்பவர்கள் கோடைக்காலங்களில் இதைக் கடைப்பிடிக்கலாம். எப்போது எண்ணெய் தேய்த்தாலும் இலேசாக சூடு செய்து தேய்த்தால் கூந்தலுக்கும் நல்லது. உடல் ஆரோக்கி யத்துக்கும் பாதிப்பு இருக்காது.
குறிப்பு: ஆயில் மசாஜ் என்பது வேறு ஆயிலை கண்டிஷனராக உபயோகிப்பது வேறு என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இங்கு கண்டிஷனருக்கு பதிலாக ஆயிலை ஷாம்புவுக்கு முன்கூட்டியே உப யோகிக்கிறோம்.
இனி தலைக்கு குளிக்கும் போது கண்டிஷனருக்கு பதிலாக முன்கூட்டியே இலேசாக எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இவை கண்டிப்பாக உங்கள் கூந்தலைப் பளபளப்பாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக