Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

நரைமுடியை கருமையாக்க வழிகள் என்ன?

 Image result for நரைமுடியை கருமையாக்க வழிகள் என்ன?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இக்கால தலைமுறையினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் முக்கியமாக இருப்பது இளம் வயதில் ஏற்படும் நரைதான். பல வகையான கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் உடலளவில் பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தலை முடியை எவ்வாறு கருமையாக்க முடியும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நரைமுடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரைமுடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் மருதாணியை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரைமுடி மறையும்.
வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் நரைமுடி மறையும்.
நெல்லியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்து வரலாம்.

சிறிது கறிவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகிவிடும்.
முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெய் அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1ஃ2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வழியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.
மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சை சாற்றையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக