இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை
நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே பலன்கள் கிடைக்கும்.
இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.
காலத்தின் கடவுளான கால பைரவர்
தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர்
கருதப்படுகிறார்.
தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர்
சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.
பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால்
நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர்,
ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
செல்வ செழிப்புடன் வாழவும், எதிரிகளின்
தொல்லை விலகவும் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதும் பைரவர் வழிபாடுதான்.
பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு
வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.
எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கினால்
சிறப்பு?
சித்திரை - சண்ட பைரவர்
வைகாசி - ருரு பைரவர்
ஆனி - உன்மத்த பைரவர்
ஆடி - கபால பைரவர்
ஆவணி - சொர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி - வடுக பைரவர்
ஐப்பசி - சேத்ரபால பைரவர்
கார்த்திகை - துவஷ்டா பீஷண பைரவர்
மார்கழி - அசிதாங்க பைரவர்
தை - குரோதன பைரவர்
மாசி - ஸம்ஹார பைரவர்
பங்குனி - சட்டநாத பைரவர்
பரிகாரம்
:
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி
பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும்.
சனி மற்றும் ராகு-கேது தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம்
செய்வது நல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு
மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக