
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ
93கி.மீ தொலைவிலும், பழநியில் இருந்து ஏறத்தாழ 63கி.மீ தொலைவிலும், கொடைக்கானலில்
இருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும் அமைந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகிய
அருவிதான் எலிவால் அருவி.
இவ்வருவியை தலையாறு அருவி என்றும் அழைப்பர்.
வத்தலகுண்டு, பெரியகுளம் பகுதிகளில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல்
செல்பவர்கள் டம்டம் பாறையிலிருந்து இந்த அருவியை பார்க்கலாம்.
கருப்பு பாறை குன்றின் பின்னணியில் நீர் வழிந்து
கொட்டுவது ஒரு நீண்ட மெல்லிய வெள்ளை துண்டு போன்று பள்ளத்தாக்கு முழுவதும்
தோன்றும்.
இந்த அருவிதான் தமிழ்நாட்டிலேயே மிக
உயரமான அருவி. அருவியின் தலைப்பகுதிக்கும், கீழே விழும் பகுதிக்கும்
செல்லமுடியும். அதற்கு நீங்கள் காடுகளில் நீண்ட தூரம் நடந்து அனுபவம் பெற்றிருக்க
வேண்டும். வனத்துறையின் அனுமதி பெற்றே இங்கு செல்ல முடியும்.
அருவிக்கு செல்லும்போதே அருவியின் சாரல் நம்மை
நனைத்துவிடும். ஆனால், அருவியின் அடிப்பகுதியை அடைவது தான் இங்கு சாதனையே.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை
பெய்தால் மட்டுமே இதன் அழகை காண முடியும்.
ஒரு காட்டு வழியாக கீழே செல்லும்போது
அமைதியாக தொடர்ந்து கீழ்நோக்கி செல்லும் ஒரு சிறிய நதியாக அருவியைப் பார்க்க
இயலும். கீழே சென்றபின் பின்புறம் அண்ணாந்து பார்த்தால், நீர் பெரும் சரிவில்
அமைதியாக வருவதை பார்க்க முடியும்.
இந்த அருவிக்கு தலையார், மூலையார்,
வறட்டார் போன்ற ஆறுகள் இணைந்து மஞ்சள் ஆறாக வருகிறது. இந்த ஆற்றை வழிமறித்து அணை
கட்டியுள்ளார்கள். அந்த அணை மஞ்சளாறு அணை என அழைக்கப்படுகிறது.
எப்படி
செல்வது?
திண்டுக்கலில் இருந்து பேருந்து
வசதிகள் உள்ளன.
எப்போது
செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு
தங்குவது?
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில்
பல்வேறு வகையான கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
இதர
சுற்றுலாத்தலங்கள் :
மஞ்சளாறு அணை
சிறுமலை
கொடைக்கானல் ஏரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக