செவ்வாய், 21 ஜனவரி, 2020

வியாசர் பிறந்த கதை!

வேத வியாசர் தான் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா ஆவார். அத்தகைய சிறப்புகள் பெற்ற மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர், பராசர மகரிஷிக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் பிறந்த கதையைப் பற்றி கீழே காண்போம்.

 இவருடைய தந்தை பராசர மகரிஷி. இவர் தான் முதல் புராணமான விஷ்ணு புராணத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு முறை, யமுனை நதியின் அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, நதியை கடக்க தன் மரப்படகில் பயனாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கண்டார். அந்த பெண்ணால் பராசர மகரிஷி முனிவர் ஈர்க்கப்பட்டார். அந்த பெண்ணின் அருகே சென்ற அவர், தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். இருவரும் மரப்படகில் அக்கரைக்குச் செல்லும் வழியில் பராசர மகரிஷி, அவள்மீது தான் கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணின் பெயர் சத்யவதி.

 அவருடைய விருப்பத்திற்க்கு சத்யவதி முதலில் தயங்கினாலும், பராசர மகரிஷியின் தொடர் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி, என்னுடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்றாள் சத்யவதி. பராசர மகரிஷி, என்ன நிபந்தனை கூறு என்று கேட்டார்.

 சத்யவதி சொன்ன முதல் நிபந்தனையாவது, நம் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றாள்.

 இரண்டாவது நிபந்தனையாவது, அவள் உடலில் இருந்து மீன் நாற்றம் வாசனையாக மாற வேண்டும் என்றும், நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றினாலும், நான் கற்புள்ளவளாகவே இருக்க வேண்டும் என்றாள். சத்யவதி கேட்ட வரத்தை பராசர மகரிஷி வழங்கினார்.

 மூன்றாவது நிபந்தனையாக, தன் குழந்தை அறிவாளியாகவும், நன்கு படித்தவனாகவும், மீனவனாக இல்லாமல் ஒரு முனிவனாக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் கேட்டாள்.

இந்த நிபந்தனைக்களுக்கு தலையசைத்த முனிவர், ததாஸ்து என கூறினார். சத்யவதி விதித்த நிபந்தனைகளின்படி நடந்து கொண்டார். பின்னர் இருவரும் அன்றைய தினம் ஒரு தீவில் இல்வாழ்க்கை நடந்தினர். அன்றைய தினம் சத்யவதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவர்தான் பின்னர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். வேத வியாசர் கருமை நிறத்தில் இருந்ததால், கிருஷ்ணா என்ற பெயரை பெற்றார். மேலும் ஒரு தீவில் பிறந்ததால் அவருக்கு த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. அதனால் வியாசா என்ற சிறுவனின் முழுப்பெயர், கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் என்றானது. இதுவே மகாபாரதம் என்னும் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர் பிறப்பின் கதை ஆகும்.

1 கருத்து:

  1. வெரும் தேக இச்சைக்கு வாழ்க்கை துறந்த முனிகள் கூட தரம் தாழ்ந்து வீண் வாக்குறுதிகளை தந்து வரலாறுகள் தடம் புரள வழி வகுத்த மிகவும் மிகவும் கேவலமான ஒரு வரலா ற்று காவியம் மகாபாரதம் அதன் வழி வந்த இதிகாசங்கள்

    பதிலளிநீக்கு

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்