Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 5 அக்டோபர், 2019

புதன் பகவான் வரலாறு !

Image result for புதன் பகவான் வரலாறு !
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




புராணமும் புதனும் :

புதனின் தோற்றம் பற்றிய முன்கதைச் சுருக்கத்தை ஏற்கனவே சந்திரன் வாழ்க்கையில் நாம் அறிவோம். சந்திரனுக்கும், தாராதேவிக்கும் பிறந்தவர் புதன். குருவின் மனைவியுடன் இக்குழந்தை வளர விரும்பாத குரு, சந்திரனிடம் அக்குழந்தையை ஒப்படைத்தார்.

சந்திரனும் அக்குழந்தையை தன் 27 மனைவிகளிடம் ஒப்படைக்க, அவர்களில் ரோகிணி மற்றும் கார்த்திகை மட்டுமே அதிக அன்புடன் வளர்க்க மற்ற மனைவிகளாலும், தட்சப் பிரஜாபதியாலும் சந்திரன் அடைந்த சாபங்களும், சிவபெருமானால் சந்திரன் மோட்சமும் அடைந்தார்.

ரோகிணி, கார்த்திகை இருவரும் புதனை அன்புடன் வளர்க்க ரோகிணியிடம் மட்டும் புதன் அதிக அன்பு கொண்டார். காலங்கள் கடந்து ஓடின. குழந்தையாக இருந்த புதன் வளர்ந்து வாலிபர் ஆனார்.

தந்தையை வெறுத்தல் :

வாலிப பருவத்தை அடைந்த புதன், தன் பிறப்பை பற்றி அறிந்ததும் தந்தையை வெறுத்தார். தந்தையினால் இதுவரை அனுபவித்த ஆதரவை வெறுத்து இருப்பிடத்தை விட்டு வெளியேறி ஆசிரம வாழ்க்கையை வாழ முடிவெடுத்தார்.

இமயமலை சாரலில் உள்ள வனத்தை அடைந்து அங்கு தனக்கென்று ஒரு ஆசிரமத்தை அமைத்தார். குருவில்லாமல் பல கலைகளை கற்று தேர்ச்சி பெற முடிவெடுத்தார். காரணம் தன் பிறப்பில், தந்தையான சந்திரன் மற்றும் குருவின் மனைவி தாராதேவி செய்த தவறினால் குருவினை வெறுத்தார். குரு இல்லாமல் சில கலைகளை கற்ற புதன், பல கலைகளை கற்க முடியாமல் தவித்தார்.

தவம் புரிதல் :

பல கலைகளை குருவின் உதவி இல்லாமல் கற்க வேண்டுமாயின் இறைவனின் அருள் வேண்டும் என எண்ணிய புதன், நாராயணனை நோக்கி தவம் இருந்தார்.

பல இன்னல்களை கடந்து தவம் புரிந்த புதனின் தவத்தைக் கண்டு நாராயணன், அவர் முன் தோன்றி அவருக்கு அருள் பாவித்தார்.

கலைகளை கற்றல் :

இமயமலை அடிவாரத்தில் கௌரி தடாகம் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து நாராயணன் அருளால் குருவே இல்லாமல் சகல கலைகளையும் புதன் கற்று தேர்ந்தார்.

கலைகளால் பல உயரத்தை அடைந்த புதன், பிறப்பால் பல அவமானங்களை சந்தித்த புதன், தன் தந்தையான சந்திரனுக்கு பின்னால் தனக்கு வர வேண்டிய அனைத்து அரச பதவிகளையும் துறந்து ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டார்.

சாபம் பெறல் :

புதன் தன் தந்தையான சந்திரனை வெறுத்து ஒதுக்கினாலும், பதவிகள் துறந்து ஆசிரம வாழ்க்கையை வாழ்ந்தாலும் சந்திரனின் அழகில் பாதியை கொண்டவராக இருந்தார்.

சகல கலைகளையும் கற்று அழகிய உருவமைப்பை கொண்ட புதனை கண்ட தேவமாதர்களில் ஒருவர், அவரிடம் தன் மனதை பறிகொடுத்து தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு இன்பத்தை அளிக்குமாறு வேண்டினாள்.

தன் பிறப்பினால் ஏற்பட்ட அவமானங்களை இனி எந்த ஒரு குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணி, அந்த தேவமாதர் எவ்வளவு வற்புறுத்தியும் மனம் இரங்காமல் இருந்தார் புதன்.

வேண்டுகோள் விடுத்த தேவலோக மாதுவை புறக்கணித்ததால் கோபம் கொண்ட தேவலோக மாது, புதனை இனி அலியாக போகும்படி சாபம் இட்டாள்.

எந்த தவறும் செய்யாத, தவறு நடந்து விடக்கூடாது என எண்ணி தனியாக ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என எண்ணி வருந்திய புதன், நாராயணனை சந்தித்து முறையிட எண்ணினார்.

நாராயணனை காணல் :

நாராயணனை கண்ட புதன் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். தேவமாதர் விட்ட சாபத்தில் இருந்து நிவர்த்தியாகும் பரிகாரத்தை கேட்டார் புதன்.

நாராயணன் நடந்த அனைத்தையும் அறிந்த பின், புதனுக்கு உதவினால் எந்த சிறப்பும் பெருமையையும் இருக்காது என எண்ணிய நாராயணன் புதனை சிவனிடம் சரணடையச் சென்னார்.

ஏனெனில் புதன் நாராயணனின் அம்சம் ஆவார். தன் அம்சத்திற்கு தானே உதவுவது சிறப்பல்ல என எண்ணினார்.

சிவபெருமானை காணல் :

நாராயணன் கூறிய அறிவுரைப்படி புதன் சிவபெருமானை காண விரைந்தார். சிவபெருமானை கண்டதும் வணங்கி தனக்கு ஏற்பட்ட நிலையினை கூறி தனக்கு விமோச்சனம் அளிக்குமாறு பணிவுடன் கேட்டார்.

சிவபெருமான் புதன், விஷ்ணுவின் அம்சம் என்பதனையும், புதனின் பிறப்பின் அவசியத்தையும் உணர்ந்து அவருக்கு சாப விமோச்சனம் வழங்கினார்.

சாப விமோச்சனம் பெறல் :

சோழ நாட்டில் உள்ள திருவெண்காடு ஸ்தலத்தில் உள்ள மூன்று குளங்களில் நீராடி, அங்கு வீற்றிருக்கும் தன்னையும், தேவியையும் பூஜை செய்து வந்தால் சாப விமோச்சனம் பெறுவாய் என்று அருள் புரிந்தார்.

சிவபெருமானின் அறிவுரைப்படி புதனும், திருவெண்காடு சென்று அம்மையையும், அப்பனையும் வணங்கி சாப விமோச்சனம் பெற்றார். இதனால் புதன் அலி எனும் சாபம் நீங்கி தன் சுய உருவத்தைப் பெற்றார்.

 சாபம் நீங்கிய புதன், திரும்பவும் ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். சூரியனின் புத்திரனான வைவஸ்தமனு, புத்திரர்கள் இல்லாமல் நீண்ட காலமாக வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தார்.

 வசிஷ்ட மகரிஷியின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாக பத்து புத்திரர்கள் உருவாகினார்கள். பத்து புத்திரர்களில் இளன் என்பவர் மூத்தோர். வைவஸ்தமனு, இளனுக்கு பட்டம் சூட்டி அரசனாக்கிவிட்டு தவம் புரிய காட்டிற்கு சென்று விட்டார்.

இளன் பெண்ணாக மாறல் :

 அரசனான பின் இளன் திக்விஜயம் மேற்கொண்டார். விஜயத்தின் போது புதனின் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பார்வதி தடாகம் என்னும் குளத்தில் நீராடினார். நீராடிவிட்டு குளத்தை விட்டு மேலே வரும் போது, அவருடைய ஆண் உருவம் பெண் உருவமாகவும், அவருடன் வந்த ஆண் குதிரை பெண் குதிரையாகவும் மாறியது.

 இதைக்கண்ட இளன் அதிர்ச்சியடைந்தார். இதற்கான காரணத்தை விசாரிக்க அங்கும் இங்கும் உலாவினார். ஒரு வழியாக அந்த காட்டில் புதன் தங்கியிருந்த ஆசிரமத்தை கண்டு, புதனிடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கூறினார்.

உருவ மாற்றத்திற்கான காரணம் அறிதல் :

 இளன் கூறியதைக் கேட்ட புதன், இளனை அமைதிப்படுத்தி உபசரித்தார். அவர் அமைதி நிலைக்கு வந்த பின் காரணத்தை கூற ஆரம்பித்தார். இளன்! தாங்கள் நீராடிய இடம் பார்வதிதேவியும், பரமேஸ்வரனும் நீராடும் இடமாகிய பார்வதி தடாகம் ஆகும்.

 சிவபெருமானையும், தேவியையும் காண செல்லும் மகரிஷிகள் மற்றும் முனிவர்கள் அங்கு அவர்கள் இல்லை எனில் நீராடும் இடத்திற்கு வந்து விடுகின்றனர். இவர்களின் வருகையால் பெண்ணாகிய தனக்கும், சிவபெருமானுக்கும் கிடைக்கின்ற தனிமை பாதிக்கப்படுவதால் தடாகத்தில் நுழைந்து, காக தூரத்தை கடந்த எந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக மாற வேண்டும் என தேவி சாபமிட்டார்.

 நீங்கள் அந்த தடாகத்திற்கு சென்றது மட்டுமல்லாமல் நீராடி விட்டு வந்துள்ளீர்கள். தேவியின் சாபத்தின் காரணமாக ஆணாக இருந்த நீங்களும் தங்கள் குதிரையும் பெண்ணாக மாறியுள்ளீர்கள் என்று கூறினார் புதன்.

பின், இளன் இந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைந்து மீண்டும் என் பழைய உருவத்தை அடைய ஏதாவது வழி இருக்கிறதா என்று புதனிடம் கேட்கிறார். இதற்கு எந்த பரிகாரமும் இல்லை என்று கூறுகிறார் புதன். இதைக்கேட்ட இளன் மனம் வருந்துகிறார்.

2 கருத்துகள்: