Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

எலெக்ட்ரிக் காரில் பயணிக்கும்போது நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார்களை வாங்கலாமா? அல்லது வேண்டமா? என ஒருவர் முடிவு செய்வதை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக 'ரேஞ்ச்' உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் கார் எவ்வளவு தூரம்? பயணிக்கும் என்பதுதான் ரேஞ்ச். முன்பெல்லாம் எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் மிக குறைவாகதான் இருக்கும்.

ஆனால் தற்போது ஓரளவிற்கு அதிக ரேஞ்ச் கொண்ட கார்கள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளன. என்றாலும் ரேஞ்ச் விஷயத்தில், வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பதற்றம் பெரிதாக குறையவில்லை. ஒரு வேளை எலெக்ட்ரிக் கார் சார்ஜ் தீர்ந்து, பயணத்தின் நடுவழியில் நின்று விட்டால் என்ன நடக்கும்? என்ற பயமும், சந்தேகமும் வாடிக்கையாளர்கள் பலருக்கு இன்னமும் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, தேவையான அளவிற்கு பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. எனவே வழக்கமான ஐசி இன்ஜின்களில் (Internal Combustion Engines) இயங்கும் கார்கள் என்றால், எரிபொருள் தீர்ந்து விட்டாலும் கூட பெரிதாக பிரச்னை ஏற்படாது. நடந்து சென்று கூட கேனில் பெட்ரோல் அல்லது டீசலை வாங்கி வந்து விட முடியும்.


ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் தற்போதுதான் அங்கொன்றும், இங்கொன்றுமாய் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே பேட்டரியில் சாரஜ் தீர்ந்து நடுவழியில் நின்று விட்டால், கொஞ்சம் சிக்கல்தான். பெட்ரோல், டீசல் கார்களில், எரிபொருள் தீர்ந்து விட்டால் என்ன நடக்குமோ? எலெக்ட்ரிக் காரின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்தாலும் அதேதான் நடக்கும்.


ஆம், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால், காரை மேற்கொண்டு ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. பெட்ரோல், டீசல் கார்களில் எரிபொருள் அளவை காட்டும் இன்டிகேட்டர் வழங்கப்பட்டிருக்கும். அதேபோல் எலெக்ட்ரிக் கார்களில், ரேஞ்ச் இன்டிகேட்டர் இடம்பெற்றிருக்கும். பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் உள்ளது? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? என்று அவை உங்களை எச்சரிக்கை செய்யும்.

 

இதை நீங்கள் கவனிக்க மறந்து விட்டால், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து கார் நடுவழியில் நிற்பதை எவராலும் தடுக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நீங்கள் நடுவழியில் எங்கேயாவது சிக்கி தவிப்பீர்கள். காரை மேற்கொண்டு ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. சரி, ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி கொண்டால், என்ன செய்வது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.

இப்படியான ஒரு சூழலில் சிக்கி கொள்ளும்போது, எலெக்ட்ரிக் காரை 'டோ' (Tow) செய்து, அருகில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விடலாம் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது நிச்சயம் நல்ல ஐடியா கிடையாது. ஏனெனில் எலெக்ட்ரிக் காரை 'டோ' செய்தால், மோட்டாரில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கின்றனர்.

எனவே ஃப்ளாட்பெட் டிரக்கை (Flatbed Truck) உதவிக்கு அழைப்பது நல்லது. இதில், உங்கள் காரை ஏற்றி, அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு வாகன உற்பத்தியாளரும், வெவ்வேறு வித்தியாசமான அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

உதாரணத்திற்கு டெஸ்லா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள், மீட்பு பணிக்கு ஃப்ளாட்பெட் டிரக்கைதான் பயன்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றன. ஆனால் நிஸான் நிறுவனமோ, புதிய லீஃப் காரை முன் சக்கரங்களை உயர்த்திய நிலையில் 'டோ' செய்ய முடியும் என்கிறது. எனினும் ஃப்ளாட்பெட் டிரக்தான் பாதுகாப்பான வழியாக பார்க்கப்படுகிறது.


இதுதவிர வாகன உற்பத்தி நிறுவனத்தையும் நீங்கள் உதவிக்கு அழைக்கலாம். ஆனால் அவர்கள் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். அதுவரை பொழுதை கழிப்பதற்கு ஏதாவது ஒன்று உங்கள் காரில் இருப்பது நல்லது. மீட்பு வாகனம் வந்ததும், உங்கள் கார் ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்யும் என்றால், அதன் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


ஆனால் அவர்கள் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து தருவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. அனேகமாக அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனை சென்றடையும் அளவிற்கு மட்டுமே அவர்கள் பேட்டரியை சார்ஜ் செய்து தருவார்கள் என பேசப்படுகிறது. எனவே எப்படி பார்த்தாலும், எலெக்ட்ரிக் காரின் பேட்டரி தீர்ந்து கார் நின்று விட்டால், நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

அதற்கு பதில் காரின் பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் உள்ளது? என்பதை கவனித்து, சரியான நேரத்தில் சார்ஜ் செய்து கொள்வது நல்லது. அத்துடன் பேட்டரியில் முழுமையாக சார்ஜ் தீரும் வரை ஓட்டுவதும் நல்லதல்ல. நீங்கள் அப்படி செய்தால், பேட்டரியில் பாதிப்பு ஏற்படும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

எனவே பேட்டரியில் இன்னும் 10-20 சதவீதம் வரைதான் சார்ஜ் உள்ளது எனும் சூழலிலேயே, அவற்றை மீண்டும் சார்ஜ் செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலமாக பேட்டரி பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்பதுடன், அவசர பயணங்களை மேற்கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் எங்கேயாவது நடுவழியில் சிக்கி கொள்வதையும் தவிர்த்து விடலாம்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக