சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
அருண் : இன்ஸ்பெக்டர் சார், இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படுறீங்க?
அருண் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
இன்ஸ்பெக்டர் : 😬😬
--------------------------------------------------------------------
மனைவி : ஏங்க.. இன்னைக்கு நான் சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா??
கணவன் : முதல்ல.. நீ சமைச்சி வை.. அப்புறம் அதுக்கு பேர் வெச்சுக்கலாம்...
மனைவி : 😡😡
--------------------------------------------------------------------
சவிதா : என் கணவருக்குத் தெரியாம ஒரு புடவை கூட நான் எடுக்க முடியாது.
ராதிகா : ஏன்?
சவிதா : துவைக்கும்போது கண்டுபிடிச்சுடுவாரே..
ராதிகா : 😂😂
--------------------------------------------------------------------
கணவன் : என்ன சமைச்சிருக்க நீ? சாணி வறட்டி மாதிரி இருக்கு.. நல்லாவே இல்ல..
மனைவி : கடவுளே.. இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பாத்திருக்காரோ? தெரியலையே..
கணவன் : 😳😳
--------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.
விளக்கம் :
தனக்கு அறமும், ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறருடைய ஆக்கத்தை கண்டு மகிழாமல் அதற்காக பொறாமைப்படுவான்.
--------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
சிறந்த வரிகள்...!!
⭐ அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்...
⭐ நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்...
⭐ உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்...
⭐ இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்...
⭐ வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்...
--------------------------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!!
சிரிக்க மட்டுமே...!!
ஆண்களிடம் சொல்லப்படும் ரகசியம் கடைசி வரை ரகசியமாகவே இருப்பதற்கு காரணம் இதுதான்...
ஒன்று... சில ரகசியங்களை அவர்கள் கவனிப்பதில்லை...😂
இரண்டு... சில ரகசியங்களை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை...😂
மூன்று... சில ரகசியங்களை ரகசியமாகவே மதிப்பதில்லை...!!😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக