சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
மனைவி : என்னங்க.. நான் செத்துப்போயிட்டா...
என்ன பண்ணுவீங்க?
கணவன் : எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி : நான் செத்தா இன்னொரு கல்யாணம்
பண்ணிக்குவீங்களா?
கணவன் : பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
மனைவி : 😏😏
கணவன் : அரை மணி நேரமா நான் நாயா கத்துறேன்.
நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?
மனைவி : எனக்கு நாய் பாஷை புரியலைன்னு
அர்த்தம்.
கணவன் : 😕😕
மனைவி : ஏழு பிறப்புலையும் நான் உங்களுக்கு
மனைவியா வர வேண்டும்.
கணவன் : எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு...
மனைவி : 😠😠
மனைவி : என்னங்க... உங்களை கணவரா அடைய
நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன் : உங்கப்பாக்கிட்ட வரதட்சணை வாங்கியதை
இப்படி குத்தி காட்டி பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்?.
மனைவி : 😬😬
கணவன் : ஏன் ஒரு மாதிரி இருக்க?
மனைவி : அத இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப்
போறீங்க?
கணவன் : சரி விடு..
மனைவி : அதான.. நான் எப்படிப்போனா உங்களுக்கு
என்ன?
கணவன் : 😑😑
---------------------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்!!
1. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும்.
அது என்ன?
2. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான்.
அவன் யார்?
3. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும்
உயிர் வரும். அவன் யார்?
4. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான்.
அவன் யார்?
5. விரல் உண்டு, நகம் இல்லை. கை உண்டு,
தசை இல்லை. அது என்ன?
விடை :
1. கிளிப்.
2. நாய்.
3. அடுப்புக்கரி.
4. தக்காளி.
5. கையுறை.
---------------------------------------------------------------------------------------------------------------
படிங்க... சிரிங்க...!!
ஒவ்வொரு அரிசியிலும் நம்ம பேரை வேணா கடவுள்
எழுதலாம்.
ஆனா அது பழைய சோறா?
பிரியாணியா? அப்படின்னு முடிவு பண்றது
பொண்டாட்டிதான்...!!😌😝
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக