செவ்வாய், 2 ஜூன், 2020

6-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவார்.

குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவராகவும், மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவராகவும், விசுவாசம் மிக்க உறவுகளான மனைவி, குழந்தைகளை கொடுப்பவராகவும், உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவராகவும் விளங்குகிறார் குரு.

 ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபருக்கு அரசியலில் உயர்பதவிகள் தேடி வரும். சட்ட நுணுக்கம் தெரிவதும், கோவில் வேத ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரம் செய்யும் நுணுக்கமான கலைகள் கற்று இருப்பதற்கு குருவே காரணம். அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியத்தை தருவதும் குருதான்.

 லக்னத்திற்கு 6-ல் குரு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும்.

6ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 செல்வ வளம் உடையவர்கள்.

👉 முன்கோபம் உடையவர்கள்.

👉 உயர்பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

👉 அலட்சிய குணம் உடையவர்கள்.

👉 பகைவர்களை வெல்லக்கூடியவர்கள்.

👉 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

👉 நல்ல ஜீரணசக்தி உடையவர்கள்.

👉 சண்டைகளில் விருப்பம் உடையவர்கள்.

👉 ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

👉 சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படாதவர்கள்.

👉 அரசாங்கத்தின் மூலம் பொருள் விரயம் ஏற்படும்.

👉 சிற்றின்ப வேட்கையை அதிகம் கொண்டவர்கள்.

👉 சிறுவிஷயங்களையும் பெரிது படுத்தக்கூடியவர்கள்.

👉 மனைவியின் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்சனைகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்