Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 ஜூன், 2020

போராட்டத்தை நிறுத்தலைனா ராணுவத்தை அனுப்புவேன்! – ட்ரம்ப் மிரட்டல்!


அமெரிக்காவில் கருப்பினத்தவரை போலீஸ் கொன்றதற்காக நடத்தப்படும் போராட்டத்தை கைவிடா விட்டால் ராணுவத்தை இறக்குவதாக ட்ரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் சிலர் அமெரிக்க வெள்ளி மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், பாதுகாப்புக்காக அதிகாரிகள் அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழிக்குள் கொண்டு சென்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தோனியில் பேசியுள்ள ட்ரம்ப் ”ஜார்க் ப்ளாயிட் இறப்பிற்கு தகுந்த நீதி கிடைக்கும். ஜனாதிபதியாக என் தலையாய கடைமை நாட்டு மக்களை காப்பாற்றுவதுதான், நமது நாட்டின் சட்டதிட்டங்களை நிலைநிறுத்த வேண்டியது என் பொறுப்பு.
ஒரு நகரம் அல்லது மாகாணம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நான் ராணுவத்தை கூட பயன்படுத்துவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக