>>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 9 செப்டம்பர், 2020

    இப்படி பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல... சிந்தியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    -------------------------------------
    டாக்டர் : என்னமா ஆச்சு உனக்கு?
    சீலா : மனநிலை சரி இல்லை டாக்டர்...
    டாக்டர் : நல்லாதான பேசுற... அப்புறம் என்ன?
    சீலா : இல்ல டாக்டர்... நாலு நாளா என் மருமகள் என்ன செஞ்சாலும் கோபமே வர மாட்டேங்குது...
    டாக்டர் : 😳😳
    -------------------------------------
    மாமியார் : மருமகளே நீ உன் இஷ்டத்துக்கு நடந்துக்க இது ஒன்னும் உன் அம்மா வீடு கிடையாது... புரிஞ்சுதா?
    மருமகள் : அத்தை... நீங்களும் உங்க இஷ்டத்துக்கு அதிகாரம் பண்ண இதுவும் உங்க அம்மா வீடு கிடையாது... புரிஞ்சுக்கோங்க...
    மாமியார் : 😠😠
    -------------------------------------
    நல்ல நட்புடன் பழக வேண்டும்...!!
    -------------------------------------
    ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை துரத்தியது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம்பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.

    இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.

    தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா? என்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக மானுக்கு அருகில் சென்றது. மானும் நரி தனக்கு உதவிதான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது. நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது.

    மான் எனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்தது. மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அரவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிறைவேற்றி கொண்டது நரி.

    நீதி : 

    யார் நல்லவர்? கெட்டவர்? என்பதை அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

    -------------------------------------
    பொன்மொழிகள்..!!
    -------------------------------------
    வெற்றியோ, தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்யுங்கள். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

    ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

    தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

    உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக