ஒரு
நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன்
உரையாடிக் கொண்டிருந்தனர்.
அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யை விட, உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்? என்று சந்தேகத்தைக் கேட்டார்.
அதற்கு முல்லா, அந்த கல்விமானிடம் உலகத்தில் இரும்பை விடத் தங்கத்துக்கு அதிகமாக மதிப்பு இருக்கிறதே, அது ஏன்? என்று கேட்டார்.
உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாக ஏதேனும் ஒரிடத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.
பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணம் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடம் வேண்டுமானாலும் தாராளமாக் கிடைக்கும். ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பது தான் அரிதாக இருக்கிறது.
இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால் தான், அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக