மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சூரியன் இவரின் தந்தையாக இருப்பினும் இருவருக்கும் இடையே நல்ல உறவு முறை இல்லாததால் சூரியன் இங்கு பகை பெற்று நிற்கின்றார். அதனால் விளையும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
தந்தையுடனான உறவில் சில முரண்பாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
வாகனப் பயணங்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த அலைச்சல் உண்டாகும்.
செய்யும் பணிகளில் அவச்சொற்கள் ஏற்படும்.
குறைவான செல்வத்தை கொண்டவர்கள்.
மனதில் ஒரு விதமான பயம் மற்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வான நிலை உண்டாகும்.
எதிரிகளால் எப்போதும் போராட்டகரமான சூழல் அமையும்.
நிதானமற்ற செயல்களால் பொருள் இழப்பும், கோபமும் உண்டாகும்.
லக்ன சுபர் பார்வையும், குருவின் பார்வையும் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய பலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக