Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

காவல் தெய்வம்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்..!!

ஆசிரியர் : 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டுறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டுனா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன் : ஏற்கனவே கட்டுன கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?
ஆசிரியர் : 😄😄
--------------------------------------------------------------
பையன் : அம்மா ஸ்கூல்ல இன்னைக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சும்மா.
அம்மா : நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன் : ஸ்கூல் தீ பிடிச்சி எரிஞ்சி போயிருச்சும்மா.
அம்மா : கெட்ட செய்தி என்னடா?
பையன் : வாத்தியாருங்க எல்லாம் தப்பிச்சிட்டாங்கம்மா.
அம்மா : 😛😛
--------------------------------------------------------------
சிறந்த வரிகள்..!

🎊 நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே...
நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!

🎊 நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக  நேர்மையை கை விட்டு விடாதே... அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும்...!!

🎊 வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...
சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.....!

ஒருவன் பழைய கட்டிடத்திற்கிடையே சென்று கொண்டிருந்தான்..

அப்போது 'அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. 'இந்த பேருந்து வேண்டாம்..." அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானான், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..? என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது... 'நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்,

'ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்ச..?"
--------------------------------------------------------------
விடுகதைகள்..!

👉 பச்சைக் கிளிப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்... அது என்ன?

👉 மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சொப்புகள்... அது என்ன?

👉 தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள்... அது என்ன?

👉 நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

✔ கள்ளிச்செடி
✔ உருளைக்கிழங்கு
✔ கப்பல்கள்
✔ தென்றல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக