செவ்வாய், 10 மார்ச், 2020

எதையும் சாதிக்க இந்த மூன்றும் இருந்தாலே போதும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

சங்கர் : என்னோட மனைவிய ஒருத்தன் கடத்திக்கிட்டு போயிட்டான் சார்..
போலீஸ் : நீங்க கவலைப்படாதீங்க.. உங்க மனைவிய மீட்டு, கடத்தினவனுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்போம்.
சங்கர் : நீங்க வேற... என் மனைவிய மீட்காம விட்டுட்டாலே அவன பழிக்கு பழி வாங்கிடலாம் சார்..
போலீஸ் : 😂😂
---------------------------------------------------------------------------------------
சீனு : ஆண் தைரியசாலியா? பெண் தைரியசாலியாங்கிற பட்டிமன்றத்துல தீர்ப்பு சொல்ற சமயத்துல நடுவர் எங்கய்யா போனாரு?
ராஜா : என்ன தீர்ப்பு சொல்றதுன்னு அவங்க மனைவிக்கிட்ட கேக்க போயிருக்காராம்.
சீனு : 😝😝
---------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!
எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும்...
அதற்கு சாட்டையடி உண்டு.. அதேபோல்
எத்தனை சிறந்த மனிதனாக இருந்தாலும்
உனக்கும் விமர்சனம் உண்டு...
வீனர்களின் விமர்சனத்திற்கு நீ பதில் சொல்லாதே...
உன்னை விமர்சிக்கும் போதே...
நீ வெற்றி பெற்றுவிட்டாய் என்பதே திண்ணம்...!
துணியுங்கள் வெற்றி நிச்சயம்...!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது,
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது,
அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல...
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது உன் வெற்றியும் நின்றுவிடுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்