Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

இரண்டே இரண்டு வழிகள்... மகிழ்ச்சியாக இருக்கலாம்... என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கலக்கலான ஜோக்ஸ் !!!

காவல்துறை அதிகாரி : கொள்ளைக் கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா... என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்ட இருந்து வரவே இல்ல?
காவலர் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து, வீடெல்லாம் குடுத்து பாத்துக்குறாங்க ஐயா.
காவல்துறை அதிகாரி : 😠😠
------------------------------------------------------------------------------------------------------
கணக்கு வாத்தியார் : உங்கிட்ட உங்க அப்பா 10 பிஸ்கெட் தர்றாரு. அதை நீயும், உன் தம்பியும் சமமா பிரிச்சு எடுத்துக்க சொல்றாரு. அப்போ ஆளுக்கு எத்தனை பிஸ்கெட் கிடைக்கும்?
மாணவன் : எனக்கு 6 பிஸ்கெட், என் தம்பிக்கு 4 பிஸ்கெட்.
கணக்கு வாத்தியார் : என்னடா உனக்கு இந்த சின்ன கணக்கு கூட தெரியலையே!
மாணவன் : இல்ல சார்.. என் தம்பிக்குத்தான் சரியா கணக்கு தெரியாது.
கணக்கு வாத்தியார் : 😩😩
------------------------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான வாழ்க்கை...!!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தான்...
ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்...
இல்லையென்றால் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்...
------------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம் :

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.
------------------------------------------------------------------------------------------------------
எதார்த்தம்...!!
இல்லாததை நினைத்து புலம்புவதை விட,
இருப்பதை நினைத்து மகிழ்ந்து கொள்...!!
------------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

2. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல. அது என்ன?

3. பிறந்தது முதல் வயிற்றின் மூலமாகவே போகிறது. அது என்ன?

4. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல... சூடு கொடுக்கும், தீ அல்ல... பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

விடைகள் :

1. பம்பரம்.

2. முள்.

3. பாம்பு.

4. சூரியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக