>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 25 ஜனவரி, 2020

    இந்த பழமொழிய சரியா சொல்லுங்க பார்க்கலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    கலக்கலான ஜோக்ஸ்..!!
    பானு : ஏய், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்டி. உன் சைனீஸ் கணவர் உன்னை பாக்கும் போதெல்லாம் 'லக்கி மீ  லக்கி மீ "-ன்னு சொல்றார். உன்னை ரொம்பவே நேசிக்கிறார் போல இருக்கு...
    லட்சுமி : அடி போடி நீ வேற, லட்சுமிங்குற என்பேரை ஒழுங்கா சொல்லத் தெரியாம அப்படி சொல்லுறார்.
    பானு : 😐😐
    ---------------------------------------------------------------------------------------------------
    அப்பா : நேத்து ராத்திரி பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்ன... ஆனா, உன் ரூம்ல லைட்டே எரியல?
    மகன் : படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதையெல்லாம் நான் கவனிக்கலப்பா...
    அப்பா : 😳😳
    ---------------------------------------------------------------------------------------------------
    பழனி : வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
    ராஜா : சம்பளம் கைக்கு வந்ததும்...
    பழனி : சம்பளம் எப்போ கைக்கு வரும்?
    ராஜா : லூசுத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகல... எந்த மடையன் சம்பளம் தருவான்.?
    பழனி : 😠😠
    ---------------------------------------------------------------------------------------------------
    தளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக்கிடங்கை திறக்கவில்லை?
    வீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது?
    தளபதி : 😧😧
    ---------------------------------------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு?
    பரீட்சையில் தெரியாத கேள்விக்கு பதில் எழுதும் மாணவன்...
    0 என்பது ஜீரோ... ஜீரோ என்றால் பூஜ்ஜியம்... பூஜ்ஜியம் என்பதுதான் சைபர்... சைபர்தான் பூஜ்ஜியம்... சைபரைதான் நாம் முட்டை என்று அழைக்கிறோம். இந்த முட்டையையே பூஜ்ஜியம் என்கிறோம்.
    ---------------------------------------------------------------------------------------------------
    வாழ்க்கை தத்துவங்கள்...!!
    அழிவை தருவது - ஆணவம்...
    ஆபத்தை தருவது - கோபம்...
    இருக்க வேண்டியது - பணிவு...
    இருக்கக்கூடாதது - பொறாமை...
    உயர்விற்கு வழி - உழைப்பு...
    கண்கண்ட தெய்வம் - பெண்...
    செய்ய வேண்டியது - உதவி...
    செய்யக்கூடாதது - துரோகம்...
    பிரிக்கக்கூடாதது - நட்பு...
    மறக்கக்கூடாதது - நன்றி...
    வந்தால் போகாதது - பழி...
    போனால் வராதது - மானம்...
    ---------------------------------------------------------------------------------------------------

    பழமொழியை வரிசைப்படுத்துங்கள்..!!
    🙋 கல்லும் எறும்பு ஊர தேயும்
    🙋 வளையுமா ஐந்திலே, வளையாதது ஐம்பதிலே
    🙋 பயமறியாது இளங்கன்று
    🙋 ஒட்டி வாழ் ஊருடன்

    விடை :

    😇 எறும்பு ஊர கல்லும் தேயும்.
    😇 ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
    😇 இளங்கன்று பயமறியாது.
    😇 ஊருடன் ஒட்டி வாழ்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக