Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

நீ நீயாக இரு.. தங்கம்/தகரம்.. காகம்/மயில்.. நாய்/சிங்கம்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
பஸ் டிரைவர் : நான் நல்லா தூக்கத்துல இருந்தேன். எங்கிட்ட கேட்டா எப்படி தெரியும்?...
போலீஸ் : 😳😳
-------------------------------------
ஆணவம்..!!!
-------------------------------------
பட்டம் ஒன்று வானத்தில் மிக உயரமாக பறந்து கொண்டிருந்தது. உயரமாக பறப்பதனால் அதற்கு ஆணவம் அதிகமாக இருந்தது.

கீழே பூக்களின் மீது பறந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியை பார்த்து, 'என்னை பார்த்தாயா, நான் வானத்தை தொடுமளவு மேலே பறக்கிறேன். நீயோ மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டு இருக்கிறாய்" என்று ஆணவமாக பேசியது.

வண்ணத்துப்பூச்சி பதிலுக்கு, 'நான் என் விருப்பப்படி பறக்கிறேன். நீயோ அடிமையாய் நூலால் கட்டப்பட்டு ஒரு சிறுவனின் விருப்பத்திற்கு ஆடுகிறாய்" என்றது.

பட்டம் தனது ஆணவப்பேச்சு தவறு என உணர்ந்தது...!!

-------------------------------------
நீ நீயாக இரு... படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------
👉 தங்கம் விலை அதிகம்தான், தகரம் மலிவுதான்...
ஆனால் தகரத்தை கொண்டு செய்ய வேண்டியதை தங்கத்தை கொண்டு செய்ய முடியாது...
அதனால் தகரம் மட்டமுமில்லை... தங்கம் உயர்ந்ததும் இல்லை...
எனவே நீ நீயாக இரு...

👉 கங்கை நீர் புனிதம்தான்...
அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை...
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாய் இருந்தால் என்ன?
கிணறாக இருந்தால் என்ன?
நீ நீயாக இரு...

👉 காகம் மயில் போல் அழகில்லைதான்...
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்...
நீ நீயாக இரு...

👉 நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லைதான்...
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத்தான்...
நீ நீயாக இரு...
-------------------------------------
வாழ்க்கையின் தத்துவம்...!!
-------------------------------------
சுட்டுவிடும் என தெரிந்தும் சூடாக இருக்கும்
டீயை குடிப்பதில் காட்டும் நிதானம்தான்
வாழ்க்கையின் தத்துவம்...
-------------------------------------
இப்படி இருந்தால் இதை செய்யுங்கள்...!!
-------------------------------------
⭐ மகிழ்ச்சியாக இருந்தால் மரம் நடுங்கள்...

⭐ கவலையாக இருந்தால் மரத்திற்கு நீர் ஊற்றுங்கள்...

⭐ கோபமாக இருந்தால் கருவேல மரங்களை வெட்டுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக