Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

பிரபலமான சந்தை

ஒரு ஊரில் மிகப்பெரிய பிரபலமான சந்தை ஒன்று உண்டு. அங்கு மிகவும் சிறப்பானது கழுதை மற்றும் குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம்தான். முல்லா சந்தை கூடுகின்ற வேளையில் ஒவ்வொரு தடவையும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வந்து, மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார்.

அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளுடன் வருவான். விற்பனை செய்வான். ஆனால் முல்லா அளவுக்கு மலிவான விலைக்கு கழுதைகளை விற்பதில்லை.

ஒருநாள் சந்தை வியாபாரம் முடித்து முல்லாவும் செல்வந்தரும் வீட்டிற்கு திரும்பி செல்லும்போது, செல்வந்தர் முல்லாவிடம், முல்லா! என் கழுதைகளை என் அடிமைகள் தங்களின் சொந்தப் பொறுப்பில் உணவளித்து கவனித்துக் கொள்வதால் எனக்கு கழுதை வளர்க்கப் கொஞ்சம் கூட பணம் செலவில்லை. அதனால் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீங்கள் மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர்கள் என்று கேட்டார்.

முல்லா, நீங்கள் உமது கழுதைகளை வளர்ப்பதற்காக உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நான் கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக