சிரிக்கலாம் வாங்க...!
மாணவன் : டீச்சர்... நேத்து நீங்க சொன்ன மாதிரியே இன்னைக்கு நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு பாட்டிய, ரோட்டுக்கு இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கமா கொண்டுவந்து விட்டுட்டோம்...!
டீச்சர் : வெரிகுட்...!! நல்ல காரியம்! வயசானவுங்க சாலையை கடக்க இப்படித்தான் உதவி செய்யணும்!!.. அதுசரி....... ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்?
மாணவன் : பின்ன என்ன டீச்சர்...! அவங்க வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க...! நாங்க அஞ்சு பேரும்தான் சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!
டீச்சர் : 😩😩
-------------------------------------------------------------------
பாபு : என்ன உன் குசநைனெ தூக்கத்துல 'ஹலோ.. ஹலோ.."ன்னு டெலிபோன்ல பேசற மாதிரி பேசறாரு?
ராமு : நான்தான் சொன்னனே, அவருக்கு தூக்கத்துல 'கால்" போடுற பழக்கம் இருக்குன்னு.
பாபு : 😝😝
-------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
பிய்யாத தோசை வேணும்னு அவக்கிட்ட கேட்டதும் அவளும் ஆசையா போட்டு தந்தா...
இப்போ பிய்க்காம திண்ணுன்னு கரண்டியோட பக்கத்துலையே நிப்பா பாருங்க... அவ தாங்க பொண்டாட்டி...
இப்போ என்னடா பண்ணலாம்னு தோசையவே வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு இருப்பான் பாருங்க அவன் தான் புருஷன்...!!
-------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
குறளும்... பொருளும்...!!
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விளக்கம் :
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்க, தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத்தக்கது அன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக