புதன், 22 ஜூலை, 2020

இது சிரிப்பதற்கான நேரம்.. கவலையை மறந்து சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-----------------------------------------------------------------
பாபு : என்னப்பா இட்லி ஜில்லுன்னு இருக்கு?
சீனு : Board என்ன எழுதியிருக்கு?
பாபு : ஆறிய பவன்னு எழுதியிருக்கு.
சீனு : அப்புறம் எப்படி இட்லி சூடா இருக்கும்?
பாபு : 😏😏
-----------------------------------------------------------------
ஆசிரியர் : இந்த கிளாஸ் முடியுற வரைக்கும் வெளிய நில்லு... அப்போதான் அறிவு வரும். 
மாணவன் : அப்போ நீங்க பாடம் சொல்லிக் கொடுத்தா அறிவு வராதா சார்?
ஆசிரியர் : 😑😑
-----------------------------------------------------------------
ராமு : பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணீங்களே... பொண்ணு எப்படி இருக்கா? 
ராஜா : அவ நல்லாத்தான் இருக்கா... மாப்பிள்ளைதான், 50 லட்ச ரூபாய் தர்றேன்... என்னைக் காப்பாத்துங்க மாமான்னு கெஞ்சறான்!
ராமு : 😂😂
-----------------------------------------------------------------
உங்களுக்கும் இந்த னழரடிவ இருக்கா?
21 - Twenty One
31 - Thirty One
41 - Forty One
51 - Fifty One

அப்போ ஏன்?

11 - Onety One-னு சொல்லாமா Eleven னு சொல்றோம்..?
-----------------------------------------------------------------
இன்றைய கடி...!!
-----------------------------------------------------------------
டீ ஸ்பூன்ல டீயை கலக்க முடியும்... ஆனா
.
.
.
டேபிள் ஸ்பூன்ல டேபிளை கலக்க முடியுமா?😋😋

என்னதான் நாய் ஓடுற தண்ணிய குடிச்சாலும்.
.
.
.
அதனால ஓடிக்கிட்டே தண்ணிய குடிக்க முடியுமா?😝😝

தோசை மாவுல தோசை சுட முடியும்...
சப்பாத்தி மாவுல சப்பாத்தி சுட முடியும்...
ஆனா
.
.
.
கடலை மாவுல கடலை சுட முடியுமா?😂😂
-----------------------------------------------------------------
தத்துவ வரிகள்...!!
-----------------------------------------------------------------
👉 உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தை பொறுத்ததில்லை வாழ்க்கை...
கிடைத்த ஊதியத்தில் மன நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை...!!

👉 நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கியுள்ளது.
நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது...!!

👉 வெற்றி இரண்டு மடங்கு நம்பிக்கையை கொடுக்கும்...
தோல்வி இரண்டு மடங்கு அனுபவத்தை கொடுக்கும்...
வெற்றியடைய நினைக்காமல் தோல்வியடைய நினையுங்கள்...
எளிதில் வெற்றியடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்