Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜூலை, 2020

school ஓபன் பண்ணியும் ஒரு பையன்.. schoolக்கு போகவே இல்ல... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
------------------------------------------------------------
அருண் : பாடத்தை கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே, ஞாபகத்துல இருக்கா..?
குமார் : அதை நான் அடியோடு மறந்துட்டேன்...!!
அருண் : 😆😆
------------------------------------------------------------
பாலா : ஒரு பையன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் அவன் ஸ்கூல்க்கு போகவே இல்ல... ஏன் தெரியுமா?
தீபக் : தெரியலையே...
பாலா : ஏன்னா அவன் ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போறான்.
தீபக் : 😬😬
------------------------------------------------------------
பாபு : எப்ப பாத்தாலும் சிரமத்துல இருக்கேன், சிரமத்துல இருக்கேன் சொல்லிக்கிட்டு இருப்பாரே நம்ம ராமு, இப்ப எங்கே இருக்காரு? 
சீனு : ஆசிரமத்துல...
பாபு : 😂😂
------------------------------------------------------------
வாழ்க்கை... படித்ததில் பிடித்தது...!!
------------------------------------------------------------
⭐ வாழ்க்கை ஒரு பயணம்... நல்லதோ, கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்...

⭐ இன்பம் வந்தால் ரசித்து கொண்டே செல்லுங்கள்...

⭐ துன்பம் வந்தால் சகித்து கொண்டே தேங்கி விடாதீர்கள்...

⭐ தேங்கினால் துயரம், வாடினால் வருத்தம்...

⭐ நிற்காமல் ஓடுவதே பொருத்தம்...

⭐ ஓடுங்கள்... நதியாக வளைந்து, நெளிந்து இலக்கை அடையும் வரை...!!😀😀
------------------------------------------------------------
வெற்றி உங்கள் காலடியில்... எப்படி?
------------------------------------------------------------
💫 பயமும், தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும்...
💫 பயத்தையும், தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள்...
💫 வெற்றி உங்கள் காலடியில்...
💫 முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே...😀😀
------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------------------------------
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

விளக்கம் : 

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக