Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

எதிர்காலத்தின் அட்சயபாத்திரம்... எது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கவலையை மறந்து சிரிங்க..!!

மனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் வந்துடுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் : நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா... இல்ல, நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி : 😡😡
------------------------------------------------------------------
ஆசிரியர் : இது வான்கோழி... முட்டை போடும் பறவை இனம்..!
மாணவன் : அப்போ இது உங்க இனம்-னு சொல்லுங்க..
ஆசிரியர் : எப்படிடா?
மாணவன் : நீங்களும் முட்டைதான சார் போடுறீங்க.
ஆசிரியர் : 😳😳
------------------------------------------------------------------
கண்டுபிடியுங்கள்..!!

🌟 இரவு பகல் விழித்திருக்கும், எப்போதும் ஒலித்திருக்கும். அது என்ன?

🌟 பறந்தபடி பாடுவான், உட்கார்ந்தால் ரத்தம் குடிப்பான். அவன் யார்?

🌟 பாதுகாப்பான பெட்டிக்குள் பலரும் விரும்பும் கடிகாரம். அவன் யார்?

🌟 மூன்று கண்கள் இருக்கும். ஆனால் பார்க்க முடியாது. அவன் யார்?

பதில் :

1. கடிகாரம்.
2. கொசு.
3. இதயம்.
4. தேங்காய்.
------------------------------------------------------------------
உழைப்பு...!!

உழைப்பு ஒரு மந்திரச்சொல்...

அது மூலதனத்திற்கே முதலீடு...

ஐம்புலன் கொண்ட மனித எந்திரம்...

எதிர்காலத்தின் அட்சயபாத்திரம்...

உழைப்பாளர்களின் சொர்க்க வாசல்...

சோம்பேறிகளின் கருடபுராணம்...

ஆரோக்கியத்தின் அச்சாணி...

வறுமையை விரட்டும் வருணபகவான்...

நேர்மையாளர்களின் நெற்றிக்கண்...

உழைப்பு ஒரு மந்திரச்சொல் - அதன்

மெய்ப்பொருள் அறிந்திட...

மெய்க்கொண்டு உழைத்திடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக