Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 2 மே, 2020

8-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.

மேலும் செவ்வாய் ரத்தக்காரகன், சகோதர காரகன், வீர-தைரியகாரகன், நவகிரக பரிபாலனத்தில் சேனாதிபதி என்ற பட்டத்தை பெற்றவர்.

தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, போர் மைதானம், போர் பயிற்சி பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள் செவ்வாய் கிரகத்தின் வசிப்பிடமாகும்.

லக்னத்தில் 8-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காராருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

👉 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

👉 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

👉 எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.

👉 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

👉 எதிர்ப்புகளை கொண்டவர்கள்.

👉 புத்திர பாக்கியம் தாமதப்படும்.

👉 கண்களில் பார்வை தொடர்பான இன்னல்கள் ஏற்படுதல்.

👉 அதிகாரம் மிகுந்த பேச்சுக்களை உடையவர்கள்.

👉 சிலருக்கு மாங்கல்ய பலம் குறைப்படுதல்.

👉 உறவினர்களின் ஆதரவுகள் குறைவுபடுதல்.

👉 தர்ம, நியாயங்களைப் பற்றி கவலைப்படாத மனதை கொண்டிருப்பார்கள்.

👉 எதையும் காலம் கடந்து புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!