>>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 2 மே, 2020

    சிவபுராணம் - பாகம் 2 பகுதி010

    உருத்திர பசுபதி நாயனார்!!


    பலவளம் நிரம்பிய சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓர் ஊர் திருத்தலையூர். இவ்வளவு வளம் நிறைந்த திருத்தலையூரில் அந்தணர்களின் வேத மந்திரம் வானெடுகிலும் ஒலித்த வண்ணமாகவே இருந்து வந்தது. இவர்கள் வளர்க்கும் வேள்வியின் பயனாக மாதம் தவறாமல் மும்மாரி பெய்து கொண்டிருந்தது.

    இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் அந்தணர் அவதரித்தார். குலத்தின் பெருமைக்கு ஏற்ப சாஸ்திர இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். பசுபதியார் எந்நேரத்திலும் திருமந்திரத்தை பக்தியுடனும், அன்புடனும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

    சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமென கொண்டிருந்தார். சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின. எம்பெருமானுடைய பெருமையை சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் உண்மைப்பொருளாகும் என்பதை அறிந்து கொண்டு இத்திருமந்திரத்தை தனது உயிரின் மேலாக கருதி வந்தார்.

    திருமந்திரத்தின் பொருளை உணர்த்தும் இம்மந்திரத்தை தனது மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். இவர் மனதளவிலும், வாக்களவிலும், உடல் உழைப்பாலும் மற்றவர்களுக்கு சிவத்தொண்டு புரிந்து வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரை நிறைந்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று இரவு, பகலாக நின்று கொண்டு உருத்திர மந்திரத்தை‌ எண்ணி இரு கைகளையும் தலைமேல் வைத்துக்கொண்டு என்றும் சிவனை மறவாத சிந்தையில் திருவுருத்திரத்தை வழுவாது ஓதிக் கொண்டிருந்தார்.

    உருத்திர மந்திரத்தை பாராயணம் செய்வதிலேயே தம் பொழுதையெல்லாம் கழித்துக் கொண்டிருந்தார். இதன் காரணமாக இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அவரது திருமந்திர பாராயணமானது அரும் தவமாகிறது. தவம் செய்து எம்பெருமானை மகிழ்வித்த பலனை அடையத் துவங்கினார். அதாவது உருத்திர பசுபதி நாயனார் செய்து வந்த திருமந்திர பாராயணமானது எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்தது.

    சுயநலம் இன்றி மிகவும் அன்புடன் எம்பெருமான் மீது கொண்ட பக்தியின் பயனாக பசுபதியாருக்கு எம்பெருமான் திருவுள்ளம் கனிந்து அவருக்கு அருள் புரிந்தார். எம்பெருமானின் அருள் பயனாலே இறைவனுடைய திருவடி அருகில் இருக்கும் அரும்பேற்றைப் பெற்றார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக