>>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • >>
  • 23-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஓய்வும் புத்துணர்ச்சியும் – மனக்கவலைக்கு மாற்று வழி!
  • >>
  • தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில் – ஒரு தனிப்பெரும் பரிகாரத் தலம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 2 மே, 2020

    எட்டாம் நாள் போர்..!

    ஏழாம் நாள் போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கௌரவர்களின் சார்பில் பீஷ்மர் படை வீரர்களைக் கொண்டு மகர வியூகம் அமைத்தார். 

    அது கடல் போல் பெரியதாக காட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக திருஷ்டத்துய்மன் தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை வகுத்தான். 

    அர்ஜுனனும் திருஷ்டத்துய்மனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்று தாக்குதலின் முன்பகுதியை காத்தனர். தர்மர், சிகண்டி ஆகியோர் இடது புறத்திலும், பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும் இருந்தனர். 

    நகுலன் மற்றும் சகாதேவனும், அபிமன்யு மற்றும் துருபதனும் வியூகத்தின் பின் புறமாக இருந்தனர். இன்றும் பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. பீமன் ஒருவனே இந்த குருக்ஷேத்திர போரை முடித்து விடுவான் என தோன்றியது.

    துரியோதனன், போர் தொடங்குவதற்கு முன்பு பீமனை கொன்று விட வேண்டும் என்று சபதம் செய்து கொண்டிருந்தான். பீமனும், துரியோதனனின் தம்பிமார்களில் முன்பு ஐந்து பேரை கொன்றது போல இன்று எட்டு பேரை கொல்ல வேண்டும் என்று தனக்குள் உறுதி செய்து கொண்டான். 

    துரியோதனனுக்கும், பீமனுக்கும் போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. துரியோதனன் பீமனை கொல்ல, தன் தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். பீமனும் தான் நினைத்தபடி கௌரவர்களை ஒவ்வொருவராக வீழ்த்திக் கொண்டிருந்தான். 

    அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். முன்பு துரியோதனனின் தம்பிகள் ஐந்து பேரை கொன்ற பீமன் இப்பொழுது எட்டு பேரை கொன்று வீழ்த்தினான்.

    அவர்களை சாதாரணமாக கொல்லவில்லை. எட்டு பேரின் கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து, தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். பீமன், போரில் மூர்க்கத்தனமான நடந்து கொண்டான். 

    பின்பு பீமன் யானைப் படையை அழித்தான். கௌரவர்கள் பீமனைக் கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும், திருதிராஷ்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது. மனம் உடைந்து போன துரியோதனன் நேராக பீஷ்மரிடம் சென்று தன் மனத்திலுள்ளவைகளை எல்லாம் கூறி வருந்தினான்.

    பீஷ்மர், துரியோதனனிடம் போர் என்றால் இரண்டு பக்கமும் நஷ்டங்கள், அழிவுகள் எல்லாம் ஏற்படும். அரசர்களாகப் பிறந்த வீரக்குடிமக்கள் போருக்குப் பயப்படக்கூடாது. நீ செய்த தீய செயல்களின் பாவபலன்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். 

    கற்பின் செல்வியாகிய திரௌபதியை அவைக்கு நடுவே மானபங்கம் செய்கிறபோது இவ்வாறெல்லாம் நடக்கும் என்று கருதித்தான் நாங்கள் உன்னைத் தடுத்தோம். ஆனால் நீ அன்று எங்கள் அறிவுரையை ஏற்க மறுத்தாய். 

    விதுரனையும் உன்னை விட்டு போகும்படி செய்தாய். இப்பொழுது வருந்தி எந்த பயனும் இல்லை என்று அறிவுரையை கூறிவிட்டு போர்க்களத்திற்கு பீஷ்மர் சென்றார்.

    களப்பலியாக இறந்த அரவான், தான் கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்ட வரத்தின்படி உயிர்பெற்றுப் போர்க்களத்திற்கு வந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.

     இதில் அரக்கன் அலம்பசனுக்கும், அரவானுக்கும் நடந்த கோரமான போரின் முடிவில் அரவான் கொல்லப்பட்டான். இதைக் கண்டு அர்ஜூனன் துயரத்தில் வருந்தினான். அரவான் கொல்லப்பட்டதைக் கண்ட கடோத்கஜன் கௌரவர் படையை தாக்கினான். 

    கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்று வீழ்த்தினான். அதைக் கண்ட துரியோதனன் தானே கடோத்கஜனை எதிர்க்க முன்வந்தான்.

    துரியோதனனை எதிர்த்து கடோத்கஜன் கடுமையாக போர் புரிந்து துரியோதனன் தேரை அழித்தான். துரியோதனன் மார்பில் எய்த அம்புகளால் இரத்தம் களத்தில் சிதறியது. 

    ஆனாலும் துரியோதனன் கலங்காமல் நின்று போரை தொடர்ந்தான். கடோத்கஜனின் போர் வலிமையைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர். கௌரவர் படையிலுள்ள புகழ் பெற்ற வீரர்கள் பலர் ஒன்றுகூடி கடோத்கஜனை தாக்கினார்கள். 

    அதனை அறிந்த பீமன், கடோத்கஜனுக்கு உதவி புரிய வந்தான். பீமன் வந்ததும் முன்னைவிடக் கோரமான போர் நடந்தது. பீமன், துரோணரை தாக்கி அவருடைய தேரை முறித்தான். கடோத்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர்களில் எட்டு பேரை கொன்றான்.

    இதுவரை பீமன் துரியோதனன் தம்பியர்களில் பதினாறு பேரைக் கொன்று வீழ்த்திவிட்டான். தர்மர் மற்றும் சிகண்டியும் கௌரவ படையின் விகர்ணன், துச்சலையின் தேர்கள் மற்றும் குதிரைகளை அழித்தனர். 

    அரவானைக் கொன்ற கௌரவர் படையை அழிக்க வேண்டும் என்ற உறுதியோடு அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். அபிமன்யு களத்தில் உள்ள சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரிடம் கடுமையாக போர் புரிந்து கொண்டிருந்தான். 

    அப்பொழுது தான் கௌரவர்களுக்கு பாண்டவர்களின் படையில் அபிமன்யு என்னும் மிகப்பெரிய வலிமையான ஆற்றல் உருவாகிகொண்டிருப்பது தெரிந்தது.

    யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் அனைத்தும் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம் கொண்டிருந்தது. 

    துரியோதனன் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றான். தர்மம் தலை தூக்க தொடங்கியது. சூரியன் மறைந்ததும் எட்டாம் நாள் போர் முடிவடைந்தது. 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக