சிரிக்கலாம் வாங்க...!
தந்தை : காதுக்கிட்ட வந்து முணுமுணுக்காதே... கெட்ட பழக்கம்... என்ன விஷயம்னு சத்தமா சொல்லு...
மகன் : காபி குடிங்கன்னு அவர்கிட்ட சொல்லி தொலைக்க வேண்டாமாம். வீட்டுல பால் இல்லைன்னு அம்மா சொல்ல சொன்னாங்க...
தந்தை : 😳😳
----------------------------------------------------------------------
கண்ணன் : என்ன சார் நைட் வீட்ல ஒரே சத்தமா இருந்துச்சு?...
கோபால் : வேற ஒன்னுமில்லைப்பா... என் பொண்டாட்டிய திட்டிக்கிட்டு இருந்தேன்..
கண்ணன் : அவங்க தான் அம்மா வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆச்சே!
கோபால் : அதனாலதான் தைரியமா சத்தம் போட்டு திட்டினேன்.
கண்ணன் : 😩😩
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
படித்ததில் பிடித்தது...!!
ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது நம் பழக்கம்...
அதை நீரில் விட்டால் நம்மால் அதை பிடிக்க முடியுமா?
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே...!!
----------------------------------------------------------------------
ஹா... ஹா. இது சரிதானே...?
சந்தோஷமா ஒரு பாட்டு கேட்கணும்னா கூட,
கஷ்டப்பட்டு ஹெட்செட் சிக்கல எடுத்தாதான் முடியும்.
அதுபோலதான் வாழ்க்கை...
----------------------------------------------------------------------
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம்...
எதிர்காலத்தை நினைத்து கனவும் வேண்டாம்...
இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்...
----------------------------------------------------------------------
எப்படி வாழ்வது சிறப்பு?
எப்படி வாழ்வது சிறப்பு?
இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதைவிட,
நம்மை போல் வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு
நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு...!!
----------------------------------------------------------------------
சிந்தனை துளிகள்....!
சிந்தனை துளிகள்....!
💪 அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
💪 செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.
💪 மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக