சிரிக்கலாம் வாங்க...!
ஆசிரியர் : என்னடா இது நோட்டு முழுக்க மணி மணின்னு எழுதி வெச்சிருக்க!!!
மாணவன் : நீங்க தான சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு புத்தகத்த எடுத்து பார்த்தா கையெழுத்து மணி மணியா இருக்கணும்னு.
ஆசிரியர் : 😠😠
----------------------------------------------------------------------
மாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் சார் சொல்றாங்க?...
ஆசிரியர் : குட்டி போட்ட பூனையால் அலையமுடியாதே அதான்.
மாணவன் : 😩😩
----------------------------------------------------------------------
பாபு : ஹோட்டல்ல காசு இல்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
ராமு : ஆமாம்..
பாபு : அப்போ பஸ்ல காசு இல்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
ராமு : 😬😬
----------------------------------------------------------------------
மகன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படுறேன்..!
அப்பா : அப்படியா, மேஸ்திரிக்கிட்ட சொல்லி மாடியில ரூம் கட்டி தரச் சொல்றேன்.
மகன் : 😝😝
----------------------------------------------------------------------
மனைவி என்பவள்...!!
கடல் சொன்னது : மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனை தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
வானம் சொன்னது : மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
பூமி சொன்னது : மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
காற்று சொன்னது : மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.
மழை சொன்னது : மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுபவள்.
சொர்க்கம் சொன்னது : மனைவி இல்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் போக எந்த முகாந்திரமும் இல்லை.
இறைவன் சொன்னார் : மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் ஆகும். அவளே வாழும் சொர்க்கம்... அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க்கம்.
உண்மையிலேயே மனைவியை நேசித்து மகிழுங்கள். அவளை சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாற்றுவது கணவனின் கைகளில்தான் உள்ளது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக