Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

உலகத்தில் ரொம்ப கஷ்டமான 4 விஷயம் என்னன்னு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

சிரிப்பதற்கான நேரம்...!

ஆசிரியர் : உன் பேர் என்ன?
மாணவி : பொன்னி மிஸ்.
ஆசிரியர் : ஸ்வீட் நேம்.
மாணவி : ஸ்வீட் நேம் இல்ல மிஸ்... ரைஸ் நேம்.
ஆசிரியர் : 😩😩
-------------------------------------------------------------------
மனைவி : அங்க பாருங்க... அந்த பிள்ளைக்கு திடீர்னு வலதுகை நெஞ்சுக்கிட்ட வெச்சுக்கிட்டு, வாய் கோணிச்சுக்கிட்டு, இடது கைய நீண்டு இழுத்துக்கிட்டே போகுது... வலிப்பான்னு பாருங்க..
கணவன் : சும்மா கெட.. பிள்ள செல்பி எடுக்குது...
மனைவி : 😨😨
-------------------------------------------------------------------
சிரிக்க மட்டுமே...!

100 திருமணமான ஆண்கள் கூட்டத்தில் 'பொண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள் என்று கூறப்பட்டது".

ஒருவரை தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள்.

கை தூக்காத அந்த நபரை அழைத்து பரவாயில்லையே... உங்கள் மனைவி அனுசரணையானவர், நீங்கள் அதிர்ஷ்டசாலித்தான் போங்க என புகழ்ந்தனர்.

அதற்கு அவர் சொன்னார்....

'அடப்போங்கப்பா, நீங்க வேற வயித்தெறிச்சல கௌப்பாதீங்க"

நேத்து வாங்கின அடியில கையை தூக்கவே முடியல...😫😫😜😐
-------------------------------------------------------------------
சரியான விடையை சொல்லுங்க...!

உச்சியிலே குடுமி உண்டு, மனிதனல்ல...👦

உருண்டையான வடிவம் உண்டு, முட்டையல்ல...🥚

நீர் ததும்பி நிறைந்திருக்கும், குளமும் அல்ல...🌊

நெற்றியிலே கண் இருக்கும், சிவனும் அல்ல...🕉

அது என்ன?

விடை :

🥥 தேங்காய்.
-------------------------------------------------------------------
இன்றைய தத்துவம்..!!

உலகத்தில் ரொம்ப கஷ்டமான 4 விஷயம் என்னன்னு தெரியுமா?

🐍 பாம்பு வாய்க்கு லிப்ஸ்டிக் போடுறது.

🐜 எறும்பை புடிச்சு கிஸ் பண்றது.

🐘 யானையை மடியில் வச்சு கொஞ்சுறது.

🕷 கொசுவுக்கு டிரஸ் போடுறது.
-------------------------------------------------------------------
மூளைக்கு வேலை..!🤔

ஒருவர் இந்த கூடையில் என்ன பழம்? என்று கேட்டார்,

மற்றொருவர் மணி எத்தனை? என்று கேட்டார்....

இவை இரண்டிற்கும் ஒரே பதில்... அது என்ன?

விடை :

🍊 ஆரஞ்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக