திங்கள், 31 ஆகஸ்ட், 2020

இன்றைய கடி... மூளைக்கு வேலை... முடிஞ்சா இதை முயற்சி பண்ணுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
குணா : டேய் எப்போ பார்த்தாலும் ஆன்லைன்-லையே இருக்கியே... உனக்கு வேற வேலை இல்லையா?
மாதவன் : நான் ஆன்லைன்-ல இருக்குறத பாத்துக்கிட்டு இருக்கியே... உனக்கு வேற வேலை இல்லையா?
குணா : 😏😏
-------------------------------------
கொஞ்சம் முயற்சி பண்ணுங்க...!!
-------------------------------------
ரெண்டு செட்டு சோள தோசையிலே
ஒரு செட்டு சோள தோசை சொந்த சோள தோசை....

அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள்
இவள் அவலளந்தால் அவள் அவலளப்பாள்
அவளும், இவளும் அவல் அளக்காவிட்டால்
எவள் அவலளப்பாள்.
-------------------------------------
மூளைக்கு வேலை கொடுங்க...!!
-------------------------------------

1. மூன்று கொண்டை வைத்திருப்பாள். ஆனால், பெண் அல்ல - அது என்ன?

விடை : அடுப்பு விளிம்புகள்

2. ஊரையே சுற்றுவான். ஆனால், வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?

விடை : செருப்பு

3. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?

விடை : பிறக்கும் குழந்தை

4. தேவைப்படும்போது பையை நிரப்பலாம். ஆனால், தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?

விடை : வயிறு

5. இரவில் எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?

விடை : நிலவு.
-------------------------------------
படித்ததில் பிடித்த வரிகள்...!!
-------------------------------------
👉 பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கான அடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

👉 வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூட உனக்கு தேவை துணை அல்ல... துணிச்சல்.

👉 உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரை அனைவரும் உத்தமர்கள்தான்.
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
ஒரு சமயம் சேர நாடு, சோழ நாட்டு மேல படையெடுத்தாங்க... ஆனால் நாட்டுக்குள்ள நுழைந்ததும் பின்வாங்கிட்டாங்க... ஏன்?
.
.
.
.
.
.
.
ஏன்னா... சோழ நாட்டுல்ல பின்(pin) Cheap-ஆ கிடைச்சுதாம்...😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்