>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 31 ஆகஸ்ட், 2020

    இப்படி இருக்காதீர்கள்... ஏன் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------
    அதிகாரி : உங்களுக்கு என்ன சின்னம் வேணும்?
    ராமு : யாருக்கும் கொடுக்காத சின்னம் வேணுமுங்க...
    அதிகாரி : அப்படி என்ன சின்னம் இருக்கு?
    ராமு : அது ஏதோ நினைவு சின்னம்னு சொல்றாங்களே அதான் வேணும்.
    அதிகாரி : 😳😳
    -------------------------------------
    மாரி : நாணயமும், சில்லறையும் ஒன்னு தானே?
    முத்து : ஆமா..
    மாரி : அப்போ ஏன் அண்ணே நீங்க ஒரு நாணயமானவர்னு சொன்னா சிரிக்கிறாங்க?...
    நீங்க ஒரு சில்லறைப்பையன்னு சொன்னா அடிக்கிறாங்க?...
    முத்து : 😜😜
    -------------------------------------
    குமார் : ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சதும் சர்வர் டிப்ஸ் கேட்டாரு...
    ஜெகன் : எவ்வளவு கொடுத்த?
    குமார் : வெந்தயம் போட்டால் இட்லி மிருதுவாக இருக்கும்னு டிப்ஸ் கொடுத்தேன். பயபுள்ள முறைக்கிறான்.
    ஜெகன் : 😬😬
    -------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    -------------------------------------
    அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே...
    உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்....

    அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே...
    அடிமையாக்கி விடுவார்கள்....

    அதிகம் பொறுமையுடன் நடக்காதே...
    பைத்தியம் ஆகும்வரை விடமாட்டார்கள்...

    வெளிப்படையாக இருந்துவிடாதே....
    பலர் உன்னை வெறுக்க நேரிடும்....

    எல்லோரையும் நம்பிவிடாதே.....
    ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்....

    கோபப் படாமலேயே இருந்துவிடாதே...
    கோமாளியாக்கி விடுவார்கள்....
    -------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -------------------------------------

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

    விளக்கம் : 

    ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
    -------------------------------------
    கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
    -------------------------------------

    கூவுற கோழி கொக்கர கோழி
    கொக்கர கோழி கொழுகொழு கோழி
    கொழுகொழு கோழி குத்தற கோழி
    குத்தற கோழி கொக்கர கோழி
    கொக்கர கோழி சிக்கற கோழி
    சிக்கற கோழி திங்கற கோழி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக