>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 2 டிசம்பர், 2019

    பறக்கும், ஆனால் பறந்து செல்லாது... கண்டுபிடிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! இது சிரிக்க மட்டுமே...!!

    அருண் : அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
    பாபு : வேறென்ன புற்று நோயாம்.
    அருண் : 😄😄
    -------------------------------------------------------------------------------------------------------------
    சேகர் : உங்க பையன் இவ்வளவு முன்னால வந்ததுக்கு நீங்க ஊக்குவித்ததுதான் காரணம்.
    குமார் : நான் ஊக்கெல்லாம் விக்கிறதில்லீங்க... பரம்பரை, பரம்பரையா பாக்கு விக்கிறதுதாங்க நம்ப வியாபாரம்.
    சேகர் : 😐😐
    -------------------------------------------------------------------------------------------------------------
    தீபக் : நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா?
    டாக்டர் : யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கிறது?
    தீபக் : 😌😌
    -------------------------------------------------------------------------------------------------------------
    ராமு : முதலாளி மணி 9 ஆச்சு கடைய சாத்தலாமா?
    சோமு : எதுக்கும் சாத்துறதுக்கு முன்னாடி அந்த புடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கோங்க.
    ராமு : 😆😆
    -------------------------------------------------------------------------------------------------------------

    பாண்டி : ரொம்ப வெயில் தாங்க முடியலன்னா என்ன செய்வீங்க?
    குமார் : போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.
    பாண்டி : அப்பயும் முடியலன்னா?
    குமார் : ஏசியை ஆன் பண்ணுவேன்.
    பாண்டி : 😩😩
    -------------------------------------------------------------------------------------------------------------

    குறளும்... பொருளும்...!!
    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.

    பொருள் :

    அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
    -------------------------------------------------------------------------------------------------------------
    பொன்மொழிகள் !!
    🌟 நீ பிறக்கும்போது உன்னை அறிந்தவர்கள் உன் உறவினர்களாக இருக்கலாம்.
    ஆனால் நீ இறக்கும்போது உலகமே உன்னை அறிந்தவனாய் நீ இருக்க வேண்டும்.

    🌟 தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை.
    விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

    🌟 சக மனிதனுக்கு தொண்டு செய்பவன், கடவுளுக்கு தொண்டு செய்தவன் ஆகிறான். தனக்குள் இருக்கும் கடவுளை தரிசிக்கும் பேறும் பெறுகிறான்.

    🌟 எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.

    விடுகதைகள்..!!
    👉 பறக்கும், ஆனால் பறந்து செல்லாது. அது என்ன? - கொடி.

    👉 ஊசி போட்டால் சுற்றிச் சுழன்று பாடும். அது என்ன? - இசைத்தட்டு.

    👉 எட்டாத உயரத்தில் எண்ணாயிரம் காவலர்கள். அது என்ன? - நட்சத்திரங்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக