ஒரு நாள் நகரத்தில் வாழும் எலி, தன் நண்பனான கிராமத்து எலியைப் பார்க்க வந்திருந்தது. கிராமத்து எலியும் நகரத்து எலியை வரவேற்று மகிழ்ந்தது.
கிராமத்து
எலிகள் வயல் வரப்புகளில் வாழ்ந்து வந்தன. அங்கு கிடைத்த தானியங்களை உண்டு
வாழ்ந்தன. நகரத்து எலியும் வந்த நாள் முதல், தானியத்தை உண்டு வந்தது. தொடர்ந்து
ஒரே உணவை உண்ண, அதற்குப் சலுப்பாகிவிட்டது.
நண்பா,
நீ என்னுடன் நகரத்திற்குப் புறப்பட்டு வர வேண்டும் அங்கு வந்து பார், வாய்க்கு
ருசியான வகை வகையான உணவுகளை உண்டு மகிழலாம் என ஆசையைக் கிளப்பியது.
அதைக்கேட்டதும்
கிராமத்து எலியும், அதனுடன் புறப்பட்டு நகரத்திற்கு வந்துவிட்டது. நகரத்தில்
வீட்டிற்கு வந்ததும் ஒரு பொந்துக்குள் போய் பதுங்கிக் கொண்டன.
அன்று
அந்த வீட்டில் ஏதோ பண்டிகை போல் இருந்தது. சமையலறையில் பலகாரங்கள் செய்து
கொண்டிருக்கும் போதே. அதன் வாசனை எலிகளை இழுத்தது.
பொறுமையுடன்
இரு நீ நினைத்ததும் இங்கு சாப்பிட முடியாது. அதற்கென காலம் நேரம் பார்த்து, ஆள்
நடமாட்டம் இல்லாத போது தான் நாம் சாப்பிட முடியும் என்றது.
கிராமத்து
எலி என்னடா இது வாழ்க்கை என சலித்துக் கொண்டது. பொறுமையாக இரு அவசரப்படாதே
அனைவரும் சாப்பிட்டு சென்றதும் மிச்சம் இருக்கும் உணவுகளை விருப்பம் போல உண்ணலாம்
என நகரத்து எலி கூறியது.
இரண்டு
எலிகளும் பொறுமையுடன் காத்திருந்தன. அந்த வீட்டில் விருந்தினர்கள் வந்திருந்தனர்.
அந்த வீட்டுக்காரர் அனைவரையும் வரவேற்று விருந்தளித்து உபசரித்துக்
கொண்டிருந்தார்.
விருந்து
முடிந்து பின்னர், இரண்டு எலிகளும் மெதுவாக வளையை விட்டு வெளியே வந்தன. பலகாரங்கள்
இருக்கும் அறைக்கு சென்றன. அங்கு இருந்த சமையல்காரர் எலிகளைப் பார்த்ததும்,
அருகில் கிடந்த மரக்கட்டையை விட்டு எறிந்தார். நல்லவேளை அவை இரண்டும் தப்பிவிட்டன.
உயிருக்குப்
பயந்து ஓடி வந்து வளைக்குள் ஒளிந்து கொண்டன. கிராமத்து எலிக்கு ஓடிவந்த வேகத்தில்,
பயமும் கலந்து இதயம் துடித்தது. ரொம்பவும் நடுங்கி ஒடுங்கி விட்டது.
அப்பா
நகரத்து வாசியே இங்கு எத்தனை பலகாரங்கள் கிடைத்தாலும், வயிறு பசிக்கும் போது
அஞ்சாமல் சாப்பிட முடியாது. இது நரக வேதனையாகும். இந்த வாழ்க்கை நமக்கு ஒத்து
வராது.
அங்கு
கிராமத்து எளிய உணவு உண்டு வாழ்ந்தாலும், யாருக்கும் அஞ்சாமல் தேவையான போது உண்டு
மகிழலாம். ஆளை விடுசாமி என்று நகரத்தை விட்டு கிராமத்திற்கு சென்றுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக