கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
தரகர் : பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது?
அப்பா : ஆடி வந்த 18 முடியுது.
தரகர் : அப்போ ஆடாம வந்தா?
அப்பா : 😏😏
------------------------------------------------------------------
மருமகள் : டாக்டர்... என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.
டாக்டர் : ஏன் திடீர்னு?
மருமகள் : என் மாமியார் நாளைக்கு ஊர்ல இருந்து வராங்க. வீட்ல இருந்து ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்க கூடாதுன்னுதான்.
டாக்டர் : 😂😂
------------------------------------------------------------------
வேலைக்காரன் : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
முதலாளி : அதுக்கு நீ ஏன் பதட்டப்படுற?
வேலைக்காரன் : இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க ஐயா?
முதலாளி : 😬😬
------------------------------------------------------------------
விடுகதை..!!

1. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து. அது என்ன?
2. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள். அவள் யார்?
3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?
4. பார்க்க அழகு, பாம்பிற்கு எதிரி. அது என்ன?
5. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
விடை :
1. கோலம்.
2. வெங்காயம்.
3. வாழைப்பழம்.
4. மயில்.
5. பாயாசம்.
------------------------------------------------------------------
இது உண்மை தானே..!!
இது உண்மை தானே..!!
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக்கொண்டதை விட...
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக்கொண்டவர்களே அதிகம்....
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை.
------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
குறளும்... பொருளும்...!!
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம் :
கேடும், ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆகையால் நெஞ்சில் நடுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோருக்கு அழகாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக