Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 மே, 2020

வீட்டை அழகாக மாற்றுவோம் வாங்க..!!

நாம் அனைவரும் இப்போது ஒரே மனநிலையில் இருக்கிறோம். அது பொழுதை எப்படி கடப்பது என்றே தெரியவில்லையே? என்று தான். நாளுக்கு நாள் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் தவித்து கொண்டு இருக்கிறோம். எனவே, இந்த வாய்ப்பை உங்கள் வீட்டை அழகாக மாற்றுவதற்கு பயன்படுத்துங்கள். எப்படி செய்வது என்ன தெரியவில்லையா? வாருங்கள் பார்ப்போம்.

🌀வீட்டை அலங்கரிப்பது என்பது கூட ஒரு சிறந்த கலை தான். சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ எதுவாக இருந்தாலும் நம் மனதிற்கு பிடித்தது போல் வைத்திருந்தாலே அது அழகுதான்.

சுத்தமாக வைத்திருத்தல் :

👉வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். நம் வீட்டில் உள்ள குழந்தைகள் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு சுத்தமாக இருக்கும்.

👉அதுமட்டுமின்றி நம்மில் பல பேர் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் அப்படியே தூக்கி போட்டு விடுவோம். அவை நாளடைவில் குப்பை கிடங்காக மாறி இருக்கும், அவ்வாறு உள்ள இடத்தை எல்லாம் எடுத்து சுத்தம் செய்யுங்கள். தேவையான பொருட்கள், தேவையில்லா பொருட்கள் என தனித்தனியாக பிரித்து வையுங்கள்.

சுவற்றில் படம் :

🎉உங்கள் மனதிற்கு பிடித்த படங்களையோ அல்லது மனதைக் கவரும் வர்ணங்களையோ, இயற்கை காட்சிகள் நிறைந்த பேப்பர்களையோ சுவற்றில் ஒட்டலாம்.

பர்னிச்சர்கள் :

🎑உங்கள் வீட்டில் உள்ள பர்னிச்சர்களை அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆங்காங்கே போட்டு அமர்ந்து இருப்போம். அவைகள் அனைத்தையும் ஒரு முறையான இடத்தில் வைத்து, அதை நிரந்தரமான இடமாக மாற்றுங்கள்.

செடிகள் :

🌱வீட்டை அழகுப்படுத்தும் இன்னொரு பொருள் பூச்செடிகள். உங்கள் வீட்டின் முன் சில பூச்செடிகளை நடுங்கள். அவை உங்கள் வீட்டிற்கு மேலும் அழகைக் கூட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக