Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

7-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். இதற்கு அங்காரகன், மங்களன், குஜன், சேய் என வேறு பல பெயர்களும் உண்டு.

செவ்வாய்க்கு சகோதரகாரகம், உத்யோககாரகம், பூமிகாரகம், கர்மகாரகம், வாக்குகாரகம், மூளைகாரகம் ஆகிய தன்மைகள் உண்டு.

நமது உடலில் ஓடும் இரத்தத்தின் அளவு, அது செல்லும் குழாய்களின் அமைப்பு, இரத்தம் செல்லும் வேகம், அது உற்பத்தியாகும் திறன், எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

லக்னத்திற்கு 7-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 தனது விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.

👉 மண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு.

👉 எதிலும் போராடும் குணம் கொண்டவர்கள்.

👉 சண்டைபிடிக்கும் குணம் உடையவர்கள்.

👉 நிலையான மனநிலையை கொண்டவர்கள்.

👉 கண்பார்வையில் குறைவு ஏற்படுதல்.

👉 நெருக்கமானவர்களால் மனக்கசப்புகள் உண்டாகும்.

👉 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள்.

👉 கண்மூடித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

👉 தனது முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

👉 அடிக்கடி உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக