>>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 17 ஏப்ரல், 2020

    அனைவரின் கூற்றையும் நம்பலாம்... ஆனால்?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!

    கணவன் : உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!
    மனைவி : ஆமாம் அதுக்கென்ன இப்போ..?
    கணவன் : இல்ல... மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா அமைஞ்சிருக்காங்களான்னு... பாக்கலாம்னு ஆசை...!
    மனைவி : 😡😡
    -----------------------------------------------------------------------
    பேரன் : தாத்தா... தூக்கம் வரல ஏதாவது பேசிக்கிட்டு இருக்கலாம்?
    தாத்தா : சரிடா, என்ன பேசலாம்?
    பேரன் : நம்ம வீட்டுல எப்போதும் 5 பேர் தான் இருப்போமா?... நான், நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி...
    தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிடுவோம்ல...
    பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போயிடுவா... அப்ப நாம 5 பேர் தானே...
    தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகிடுவோம்ல...
    பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்தா, 5 பேர் தானே...
    தாத்தா : உருப்படாதவனே, போய் ஒழுங்கா தூங்குடா...!
    பேரன் : 😂😂
    -----------------------------------------------------------------------
    நோயாளி : டாக்டர்... டாக்டர்... எனக்கு தூரத்தில் இருக்குறதெல்லாம் சரியா தெரிய மாட்டேங்குது...
    டாக்டர் : கிட்ட போயி பாக்க வேண்டியதுதான...
    நோயாளி : நிலாவை எப்படி டாக்டர் பக்கத்துல போயி பாக்குறது.
    டாக்டர் : 😏😏
    -----------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    ஆயிரம் தோல்விகளை நீ ஒரு விஷயத்தில் அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று இருக்குமேயானால், உன் போல வெற்றியாளன் இந்த உலகில் இன்னும் உருவாகவில்லை...

    நல்லது எது? கெட்டது எது? என்பதை யார் சொன்னாலும், அனைவரின் கூற்றையும் நீ நம்பலாம்...
    ஆனால் ஆராய மட்டும் மறந்து விடாதே... உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே...
    -----------------------------------------------------------------------
    நேசியுங்கள்...!!

    இருளை நேசி... விடியல் தெரியும்...

    தோல்வியை நேசி... வெற்றி தெரியும்....

    உழைப்பை நேசி... உயர்வு தெரியும்...

    உன்னை நீ நேசி... உலகம் உனக்கு புரியும்...
    -----------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

    விளக்கம் :

    நடுநிலைமை உடையவனின் செல்வ வளம், அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளவர்களுக்கும் உறுதியான நன்மை தரும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக