கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு வீடுகளில் உள்ளனர். மக்களின் அனைத்து முக்கியமான பணிகளும், தேவைகளும் ஆன்லைன் மூலமே செய்து முடிக்கப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்களில் துவங்கி குழந்தைகளின் வீட்டுப்பாடம் வரை அனைத்தும் தற்பொழுது ஆன்லைன் இல் தான் நடைபெறுகிறது.
கூடுதல் கேஷ்பேக் சலுகை
கூடுதல் கேஷ்பேக் சலுகை
குறிப்பாக மக்களின் ரீசார்ஜ் தேவை, மின்சார கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் போன்ற கட்டணங்களின் பில்களை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்ளும் வசதியை தற்பொழுது மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கட்டணத்தை ஆன்லைன் இல் செலுத்தும் பொழுது நமக்குக் கூடுதல் கேஷ்பேக் சலுகையாக ரூ.101 கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.
ரூ.101 கேஷ்பேக் கிடைக்கும்
கூகிள் நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண தளமான கூகிள் பே பயன்பாட்டின் மூலம் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை வழங்க கூகிள் முன்வந்துள்ளது. இந்த புதிய சலுகையின் கீழ், கூகிள் பே பயனர்களுக்கு ரூ.101 கேஷ்பேக் கிடைக்கும். ஆனால், இதை உடனே அப்படி எளிதாகப் பெற்றுவிட முடியாது, இதற்கான சில நிபந்தனைகளைக் கூகிள் நிறுவனம் விதித்துள்ளது.
கேஷ்பேக் சலுகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனை
கூகிள் பே பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் 3 வெவ்வேறு பில் தொகையை செலுத்த வேண்டும், அப்படி செலுத்தும் பொழுது ஒவ்வொரு பிரிவின் கீழும் பயனர்களுக்கு அந்த பில் தொடர்பான ஸ்டாம்ப் வழங்கப்படும். இந்த 3 ஸ்டாம்ப்களை நீங்கள் சேகரித்த பின்னர் உங்களுக்கான ரூ.101 கேஷ்பேக் சலுகையை பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்ச பில் தொகையாக கட்டாயம் ரூ.199 ஆக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி இந்த கேஷ்பேக் சலுகையை சரியாக பெறுவது?
கூகிள் நிறுவனத்தின் அறிவிப்புப்படி, இணையம், மின்சாரம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய முந்திரி பிரிவுகளின் கீழ் பில் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அதற்கான மூன்று ஸ்டாம்ப் முத்திரைகளைச் சேகரித்து, கூகிள் பே பயன்பாட்டில் இருக்கும் ரிவார்ட்ஸ் பிரிவுக்குச் சென்று உங்களுக்குக் கிடைத்த மூன்று ஸ்டாம்களையும் சமர்ப்பித்து ரூ.101 மதிப்பிலான கேஷ்பேக் சலுகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மூன்று விதமான ஸ்டாம்ப் முத்திரைகளை எப்படிச் சேகரிப்பது?
முதலில் 'இன்டர்நெட்' ஸ்டாம்ப் முத்திரையைப் பெற, பயனர்கள் கூகிள் பே பயன்பாட்டைப் பயன்படுத்தி குறைந்தபட்ச கட்டண தொகையான ரூ.199க்கு மேல் உள்ள லேண்ட்லைன் அல்லது பிராட்பேண்ட் பில் தொகையைச் செலுத்தி, இன்டர்நெட் ஸ்டம்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.
மின்சாரம் ஸ்டாம்ப் பெறுவது எப்படி?
இதேபோல், உங்கள் கேஷ்பேக் சலுகைக்குத் தேவைப்படும் 'மின்சாரம்' முத்திரை கொண்ட ஸ்டம்ப்பை பெற, நீங்கள் கூகிள் பே பயன்பாட்டின் மூலம் குறைந்தபட்ச தொகையான ரூ.199 க்கு மேல் கூகிள் பே பயன்பாட்டில் உள்ள மின்சார பிரிவிற்குக் கீழ் சென்று பில் தொகையைச் செலுத்தி உங்கள் மின்சார முத்திரையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மொபைல் ஸ்டாம்ப் முத்திரையைப் பெறுவது எப்படி?
இறுதியாக, உங்களுக்குத் தேவைப்படும் 'மொபைல்' ஸ்டாம்ப் முத்திரையைப் பெற மொபைல் ரீசார்ஜ் அல்லது மொபைல் போஸ்ட்பெய்ட் பில் செலுத்தப்பட வேண்டும். கூகிள் பே பயன்பாட்டிற்குச் சென்று மொபைல் ரீசார்ஜ் பிரிவின் கீழ் குறைந்தபட்ச கட்டண தொகையான ரூ.199 க்கு மேல் கட்டணத்தை செலுத்தி உங்களுக்கு தேவைப்படும் மூன்றாம் மொபைல் ஸ்டாம்ப் முத்திரையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ரூ.101 மதிப்பிலான கேஷ்பேக்
இந்த மூன்று வெவேறு பில் கட்டணங்களைக் கூகிள் பே பயன்பாட்டின் மூலம் செலுத்தி, இன்டர்நெட், மின்சாரம் மற்றும் மொபைல் ஆகிய மூன்று ஸ்டாம்ப் முத்திரைகளைப் பெற்றபின், கூகிள் பே வழங்கும் ரூ.101 மதிப்பிலான கேஷ்பேக் சலுகையைக் கூகிள் நிறுவனத்திடம் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக