கொரொனா வைரஸால் ஒட்டு மொத்த இந்தியாவும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஓரளவுக்காவது உலகம் இயங்குகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் டெலிகாம் தான். இந்த இணையம் மற்றும் தொலை பேசி சேவைகளை வைத்து தான், மக்களுக்குத் தேவையான செய்திகள் தொடங்கி, அலுவலக வேலைகள் வரை எல்லாமே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இப்போது நமக்கு இணைய சேவை கொடுத்துக் கொண்டு இருக்கும் டெலிகாம் நிறுவனங்களே ஒரு நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
என்ன பிரச்சனை?
இந்தியாவின் டெலிகாம் துறையை நிர்வகிக்கும், நெறிமுறைப்படுத்தும் அமைப்புகளில் முதன்மையானது டிராய். இந்த டிராய் அமைப்பு, இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள், வரும் மே 03, 2020 வரைக்குமாவது, ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டியை நீட்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது.
காரணம்
மக்கள், தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்யப்போகிறேன் என, வெளியே கிளம்பி வந்துவிடக் கூடாது, அதனால் சமூக விலகல் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் டிராய் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் பிழைப்பை பார்க்க வேண்டுமே! இதற்கு முன்பே ஒரு முறை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறார்களே!
முதல் முறை நீட்டிப்பு
ஏர்டெல், வொடாபோன் ஐடியா என இரண்டு நிறுவனங்களும், தங்களின் 18 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 வரை, ப்ரி பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் வேலிடிட்டிக்களை நீட்டித்தார்கள்.
அதோடு கொஞ்சம் டாக் டைமையும் கொடுத்தார்கள். ஜியோ கூட தன் 9 கோடி ஜியோ ஃபோன், வாடிக்கையாளர்களுக்கு 100 நிமிட கால், 100 எஸ் எம் எஸ்-களை ஏப்ரல் 17 வரை வழங்கியது. ஆனால் இந்த முறை நீட்டிக்க மறுக்கிறார்கள்.
டிராய் தரப்பு
'கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, லாக் டவுன் காலம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் இருக்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வொடாபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களே முன் வந்து, ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை நீட்டிக்க வேண்டும்' என டிராயில் ஒரு மூத்த அதிகாரி சொல்லி இருக்கிறார்.
டெலிகாம் கம்பெனிகள்
ஆனால் டெலிகாம் கம்பெனிகளோ, வேலிடிட்டி மற்றும் சலுகைகள் நீட்டிப்பதை மறுக்கிறார்கள். அப்படி சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்றால், டிராய் அமைப்பு, இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு USO ஃபண்ட் வழியாக பணத்தைக் கொடுக்க வேண்டும் என, Cellular Operators Association of India (COAI) வழியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக