>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 11 ஜூலை, 2020

    இதுதாங்க வாழ்க்கை... கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்!!

    -------------------------------------------------------------------
    ஹா... ஹா... இது சிரிக்க மட்டுமே...!!
    -------------------------------------------------------------------
    கோவிலுக்கு ஒரு சாமியார் வந்திருந்தார்.
    பல்வேறு விஷயங்களை பேசி, நமக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பிப்பது எப்படி? என்பதை சொன்னார்.
    யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு...
    நாய் துரத்தினால் ஓடாதே... திரும்பி முறைத்து பார்...
    பாம்பு துரத்தினால் நேராய் ஓடு...
    புலி துரத்தினால் மரத்தின் மேல் ஏறு...
    சிங்கம் துரத்தினால் பிணம் போல் நடி...
    இப்படி எது துரத்தினாலும் தப்பிக்க சொல்லித்தந்தார்.
    மனைவி துரத்தினால் என்ன சாமி செய்வது? என்று கேட்டேன்...
    வெகு நேரம் யோசித்துவிட்டு சொன்னார்...
    .
    .
    .
    அப்படி துரத்தப்பட்டு தப்பி வந்தவன்தான் நான் என்று...😂😂
    -------------------------------------------------------------------
          சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------------------------------------
    சீனு : எங்க அப்பாவால தான் நிறையப்பேரு வீட்டுல அடுப்பு எரியுது...
    ராமு : அவ்வளவு நல்லவரா?
    சீனு : இல்லை... எங்க அப்பாதான் கேஸ் சிலிண்டர் போடுவாரு...
    ராமு : 😬😬
    -------------------------------------------------------------------
    செல்லம்மா : ஹலோ... நான் செல்லம்மா பேசுறேன்...
    தொகுப்பாளர் : அப்போ நாங்க மட்டும் கோபமாவா பேசுறோம்?? பேரைச் சொல்லும்மா???
    செல்லம்மா : 😳😳
    -------------------------------------------------------------------
    உங்கள் நாவிற்கு வேலை...!
    -------------------------------------------------------------------
    புட்டும் புதுப் புட்டு...
    தட்டும் புதுத் தட்டு...
    புட்டைக் கொட்டிட்டு...
    தட்டைத் தா கிட்டு...

    வீட்டுக்கிட்ட கோரை...
    கல்லுக்குள்ள தேரை...
    கூரை மேல நாரை...
    சீறித்தாவும் சாரை...
    -------------------------------------------------------------------
                 இது தான் வாழ்க்கை...!!
    -------------------------------------------------------------------
    🍋 மஞ்சளா இருக்குற எலுமிச்சைய பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது...

    🥚 வெள்ளையா இருக்குற முட்டைய ஒடைச்சா மஞ்சளா கரு வருது...

    👉 இதுதாங்க வாழ்க்கை...!!😌😌
    -------------------------------------------------------------------
     பொன்மொழிகள் ..!!
    -------------------------------------------------------------------

    🌟 அளவில்லாத ஆசை நமது நல்ல குணங்களை அழித்துவிடும்...

    🌟 பொறுமையும், விடாமுயற்சியும் மலைகளைக்கூட தகர்த்துவிடும்...

    🌟 பிறருடைய தவறுகளை கண்டு தன் தவறுகளை திருத்திக் கொள்கின்றவன் அறிவாளி...

    🌟 தயங்குபவர் கை தட்டுகிறார்... துணிந்தவர் கைத்தட்டல் பெறுகிறார்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக