>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 11 ஜூலை, 2020

    வயலில் வேலைக்கு உதவும் பை எது?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------------------------------
    கலக்கலான ஜோக்ஸ்...!!
    -------------------------------------------------------------------
    ஆசிரியர் : முட்டாளுக்கும், அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
    மாணவன் : நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சார். எங்களை அடிப்பதனால் நீங்கள் அடிமுட்டாள் சார்.
    ஆசிரியர் : 😠😠
    -------------------------------------------------------------------
    ஆசிரியர் : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
    பாபு : வளையும் சார்.
    ஆசிரியர் : எப்படி?
    பாபு : எங்க தாத்தாவுக்கு ஐந்து வயசில் முதுகு வளையவில்லை. ஆனால் 50 வயசில் வளைஞ்சிடுச்சு சார்!
    ஆசிரியர் : 😏😏
    -------------------------------------------------------------------
    ஆசிரியர் : பூனை எலியை கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு?
    மாணவன் : கடி காலம் சார்.
    ஆசிரியர் : 😩😩
    -------------------------------------------------------------------
    ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து மேசையில வெச்சிட்டு நீ வந்து இங்க உட்காந்திருக்க?
    மாணவன் : நீங்க தானே சார் பிரச்சனைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
    ஆசிரியர் : 😳😳
    -------------------------------------------------------------------
    பை புதிர்கள்...!!
    -------------------------------------------------------------------
    கறி சமைக்க உதவும் பை எது?
    .
    .
    .
    அகப்பை.

    வயலில் வேலைக்கு உதவும் பை எது?
    .
    .
    .
    கலப்பை.

    உணவு உடலில் தங்கும் பை எது?
    .
    .
    .
    இரைப்பை.

    மரங்களில் இதுவும் ஒரு பை எது?
    .
    .
    .
    இலுப்பை.

    திருடன் வழிப்பறி செய்யும் பை எது?
    .
    .
    .
    கைப்பை.
    -------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -------------------------------------------------------------------
    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.

    விளக்கம் :

    அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர். ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக