நம்மில் பலரும் நவகிரகங்களில் சனிபகவானைப் பார்த்து மிகவும் பயமடைந்துள்ளோம் என்றால் மிகை இல்லை. ஆனால் சனிபகவான் கோபக்காரர்தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனிபகவான் மிக முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார்.
சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.
தொழிற்காரகன், கர்மகாரகனான சனிபகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.
லக்னத்திற்கு 10-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் தேடிவரும்.
10ல் சனி இருந்தால் என்ன பலன்?
👉 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.
👉 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.
👉 தன்மானம் மிக்கவர்கள்.
👉 நல்ல வேலையாட்களை கொண்டவர்கள்.
👉 பல தொழில் செய்யக்கூடியவர்கள்.
👉 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
👉 வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
👉 விவசாயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 சிலருக்கு பணசேர்க்கை உண்டாகும்.
👉 திடீர் உயர்வு ஏற்படும்.
👉 திடீர் மன அழுத்தம் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக