Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஜூலை, 2020

மகா கஞ்சனின் கதை

கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன், ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார்.

விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள். ஒருவருக்கு நூறு ரூபாய் தான். வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை என்றான்.

அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இலவசமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால், நீங்கள் எனக்கு இருநூறு ரூபாயை கொடுத்துவிட வேண்டும் என்றார்.

கஞ்சன் தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனுக்கு கை கொடுத்து, நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் சிறு சத்தம்கூட எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி.

நான் கூட, ஒரே ஒரு சமயம், என் மனைவி, விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார்.

நீதி :

சிக்கனம் இருக்கலாம். ஆனால், கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக